LIVE-UPDATES

Tamil Live Breaking News: ரவுடி மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு - திருச்சியில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் பெயரளவிற்கு மட்டுமே கடிதம் எழுதுகிறீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும் மீட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை விடுத்துள்ளார். பெங்களூருவில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜ்க்குள் வைத்தவர் யார் என அடையாளம் தெரிந்தது என பெங்களூரு காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார். குற்றவாளி கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல எனவும் பெங்களூரு காவல் ஆணையர் தகவலளித்துள்ளார். திருச்சி அருகே ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் பதுங்கி இருந்த ஜம்பு என்ற ரவுடியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். பிடிக்க முயன்றபோது அரிவாளால் வெட்டியதால் உதவி ஆய்வாளர் ராஜகோபால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்குவதன் மூலம் வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. புதிய நீர்நிலையை உருவாக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் எனவும், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. விஜயின் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு மது அருந்திவிட்டு வரக் கூடாது என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தல். இருசக்கர வாகனங்களில் வரும் தவெக தொண்டர்கள் சாகசங்களில் ஈடுபடக் கூடாது எனவும், பேருந்து, வேன்களில் உரிய எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை என்று ரவுடி சீசிங் ராஜா மனைவி தெரிவித்துள்ளார். ரவுடி சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு பின் ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து சீசிங் ராஜாவின் மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் சீசிங் ராஜாவை காவல்துறை என்கவுன்ட்டர் செய்யும் என்று நேற்றே கூறியுள்ளார். அதன்படி, இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #JUSTIN ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனது கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ரவுடி சீசிங் ராஜாவை என்கவுன்ட்டர் செய்யப்போவதாக நேற்றே அவர் மனைவி வெளியிட்ட வீடியோ #SeizingRaja #Police #Arrest #Wife #Video | pic.twitter.com/jfOSuLSftU None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.