SPORTS

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை விட 180 மடங்கு பணக்கார விளையாட்டு வீரர் யார் தெரியுமா ?

நீராஜ் சோப்ரா உலகின் விளையாட்டு வீரர்கள் புகழ்பெற்றவர்களாக இருப்பதோடு பெரும் பணக்காரர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஒரு ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து வீரரான லெப்ரான் ஜேம்ஸ், $800 மில்லியன் நிகர சொத்து மதிப்பை கொண்டுள்ளார் என்ற செய்தியே அது. அதில் என்ன சுவாரஸ்யம் என பார்த்தால் நீரஜ்-ஐ விட ஜேம்ஸ் பெரும் பணக்காரர் என்ற தகவலே. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், ஜேம்ஸை ஒரு தங்கப் பதக்கம் வென்றவராக மட்டுமல்லாமல் விளையாடு உலகின் பணக்காரராகவும் உயர்த்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், ஜேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். என்பிஏ எனப்படும் அமெரிக்க தேசிய கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபலமானவர் லெப்ரான் ஜேம்ஸ். இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இதையும் படிக்க: இடிந்து விழுந்த பிரமிடு… பூமி அழிவின் தொடக்கமா? - பழங்குடியினர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! டிசம்பர் 30, 1984 ஆம் ஆண்டு பிறந்த லெப்ரான் ரேமோன் ஜேம்ஸின் பயணமானது, ஓஹியோவின் அக்ரோனில் உள்ள செயின்ட் வின்சென்ட்-செயின்ட் மேரி உயர்நிலைப் பள்ளியில் தொடங்கியது. மேலும், அவர், 2003 இல் NBA விளையாட்டின் க்ளீவ்லேண்ட் காவலியர்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவராக பிரபலமான லெப்ரான் ஜேம்ஸ், இவர் பாரிஸில் மற்றொரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துடன் உலகின் புகழ்பெற்ற வீரராக உருவாகியுள்ளார். அதோடு, உலகளவில் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் அவர் உயர்ந்துள்ளார். ஃபோர்ப்ஸ் கூற்றுப்படி, கடந்த காலத்தில் ஒரு பில்லியன் டாலர்களை தாண்டியதாக இருந்த அவரது மதிப்பு, தற்போது $800 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, தனது ஒலிம்பிக் சாதனைகளால் சாதனை படைத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா, இந்த முறை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்வென்றார். பாரிஸில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், நீரஜ் சோப்ரா இப்போது ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற 5 வது இந்தியர் ஆவார். சோப்ரா வளமிக்க குடும்ப பின்னணியை கொண்டவராக இருப்பினும், ஜேம்ஸுடன் ஒப்பிடுகையில் குறைவானது. சோப்ராவின் மாத வருமானம் சுமார் ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடதக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.