SPORTS

எருமை மாட்டை பரிசாக வழங்கியது ஏன்? - அர்ஷத் நதீமின் மாமனார் சொன்ன விளக்கம்!

அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்காக தனிநபர் பிரிவில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள அர்ஷத் நதீமுக்கு அவரது மாமானார், எருமை மாடு பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானின் பெருமையை விளையாட்டு உலகில் உரக்கச் சொன்ன அர்ஷத் நதீம்-க்குதான் இந்த உற்சாக வரவேற்பு. பாகிஸ்தானில் கிரிக்கெட், ஹாக்கியை தாண்டி வேறு எந்த விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு கிடைத்த 11 பதக்கங்களில் 8 பதக்கங்கள் ஹாக்கி மூலமே கிடைத்துள்ளன. நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், ஈட்டி எறிதல் என 3 பிரிவுகளில், மொத்தமே 7 பாகிஸ்தான் வீரர்களே பங்கேற்றனர். இதில் தனிநபர் பிரிவில் பாகிஸ்தானுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் அர்ஷத் நதீம். ஈட்டி எறிதல் பிரிவில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய நதீமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது மாமனார் எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானை பொருத்தவரையில், எருமை மாடு, கருப்புத் தங்கமாக பார்க்கப்படுகிறது. விவசாய நாடான பாகிஸ்தானில், கால்நடைகளின் பங்கு மிகப்பெரியது. விவசாய பொருளாதாரத்தில், கால்நடைகளின் பங்கு 50 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக எருமை பால் உற்பத்தியில், இந்தியாவுக்கு அடுத்தப்படியாக உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. மதிப்பும் கவுரமிக்கதுமான பரிசாக பார்ப்பதாலேயே, எருமை மாட்டை நதீமுக்கு அவரது மாமனார் நவாஸ் பரிசாக அளித்துள்ளார். அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எருமை மாட்டை பரிசாக அளிப்பதாக நவாஸ் கூறுகிறார். ஒலிம்பிக் மட்டுமல்ல, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றிருந்தாலும், நதீம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கனேவால் (Khanewal) கிராமத்தில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் எவ்வித பெரிய கடைகளும் இல்லை, அரசு மருத்துவமனைக்காக 27 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்திலும், விவசாய நிலத்திலுமே நதீம் பயிற்சி பெற்று இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளார். மிகப்பெரிய சாதனையைப் படைத்தாலும், நதீம் இன்றும் அடக்கமாவே இருக்கிறார். அவரது இரு குழந்தைகளும், கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிலேயே படிக்கின்றனர். நதீமுக்கு இதுவரை இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய் வரை பரிசாக கிடைத்துள்ளது. இந்த பணத்தில் குடும்பத்தினருடன் மெக்கா செல்வதே தனது கனவு என கூறியுள்ளார் நதீம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.