SPORTS

நீரஜ் சோப்ரா - மனு பாக்கருக்கு திருமணமா..? பெற்றோர் சொன்ன சீக்ரெட் இதுதான்!

மனு பாக்கர், நீரஜ் சோப்ரா பாரிஸ் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம் செய்து கொள்வார்களா? ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற பதக்கங்களை தாண்டி இதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பிரபலம் என்றாலே பிராப்ளம்தான் என கவுண்டமணி நகைச்சுவையாக சொன்னாலும் இந்தியாவை பொறுத்தவரை அது உண்மைதான். அரசியல்வாதிகள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களைத் தாண்டி தற்போது Social Media Influencer என பிரபலங்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. நட்சத்திர அந்தஸ்து பெறாதவரை யாரையும் சட்டை செய்வதே இல்லை. அதேநேரத்தில் ஒருவர் பிரபலமாகிவிட்டால், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. அந்த வரிசையில் சிக்கியிருப்பவர்கள்தான் பாரிஸ் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் நீரஜ் சோப்ரா மற்றும் மனு பாக்கர். ஈட்டி எறிதலில், டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸில் வெள்ளி வென்றார். இதேபோல, துப்பாக்கி சுடுதலில், மனு பாக்கர் இரு வெண்கலங்களை வென்று, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதையும் படிங்க : எருமை மாட்டை பரிசாக வழங்கியது ஏன்? - அர்ஷத் நதீமின் மாமனார் சொன்ன விளக்கம்! இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்ற கேள்வியுடன் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் இரு வீடியோக்கள். பாரிஸில் நீரஜ்ஜும் மனுவும் சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ ஒன்றில் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்காமலே வார்த்தைகளை பரிமாறிகொள்கின்றனர். இருவரும் பேசிமுடித்தபிறகு, இணைந்து நின்று போட்டோ எடுக்க மனுபாக்கரின் தாய் விடுத்த வேண்டுகோளை, மனுபாக்கர் மறுத்துவிடுகிறார். இதேபோல, மற்றொரு வீடியோவில், மனுபாக்கரின் அம்மா, நீரஜ் சோப்ராவின் கையைப் பிடித்து தனது தலையில் வைத்து ஏதோ கூறுகிறார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ்ஜின் தாய், அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இவை அனைத்தையும் சேர்த்து, நீரஜ்ஜும், மனு பாக்கரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இருவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனினும் இவை எல்லாவற்றுக்கும் மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் விளக்கம் அளித்துள்ளார். மனு பாக்கருக்கு திருமணத்துக்கான வயது வரவில்லை என்றும், அதுகுறித்து தாங்கள் யோசிக்கவே இல்லை எனவும் கூறியுள்ள அவர், மனு பாக்கர் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தங்களது தற்போதைய எண்ணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மனுவின் அம்மா, நீரஜ் சோப்ராவை தனது மகனாகவே கருதுகிறார் என்றும் கூறி இணைய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.