SPORTS

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு குவியும் பரிசுத்தொகை.. எவ்வளவு கோடி தெரியுமா?

ஐரோப்பியர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு விளையாட்டில் தெற்காசியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இரு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். ஆம்!, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கத்தையும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளியையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். ஆனால், அதுவரை அந்த தூரத்தை கடந்து, பாகிஸ்தான் வீரர் நதீம் 91 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தை நதீம் வென்று கொடுத்தார். இதன் மூலம் அவருக்கு பல தரப்பிலும் இருந்து பரிசுகள் குவிந்து வருகின்றன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் நீரஜ் சோப்ரா உலக சாதனை நிகழ்த்தியன் மூலம் அவரது சொத்து மதிப்பு உயரத் தொடங்கியது. அதன்பிறகு 2023 உலக சாம்பியன்ஷிப் மற்றும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு பல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் மாறினார். குறிப்பாக ஒமேகா, அண்டர் ஆர்மர் உள்ளிட்ட பல பிராண்டுகளில் நடித்து வருகிறார். இதனால், அவரது சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.37 கோடி என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் குறைவுதான் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு அவரது நிகர சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏனெனில், பல தரப்பிலும் இருந்து அவருக்கு பணப் பரிசுகள் குவிந்து வருகின்றன. அவர் இதுவரை பாகிஸ்தான் ரூபாயில் 15 கோடி வரை பரிசுகளை பெற்றுள்ளார். இதையும் படிங்க: ஆறுகளே இல்லாத 8 நாடுகள் - குடிநீர் கிடைப்பது இப்படித்தான்! குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ், அர்ஷத் நதீமிற்கு 10 கோடி பாகிஸ்தான் பணத்தை பரிசாக அறிவித்துள்ளார். அதேபோல், அம்மாநில ஆளுநர் சர்தார் சலீம் ஹைதர் கான் 20 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார். இதனிடையே, சிந்து மாகாண முதலமைச்சர் 5 கோடி பாகிஸ்தான் ரூபாயை பரிசாக அறிவித்துள்ளார். அம்மாநில ஆளுநர் கம்ரான் டெசோரி 10 லட்சம் வழங்குவதாகவும், பிரபல பாகிஸ்தான் பாடகர் அலி ஜாபர் 10 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர் அகமது ஷசாத் தனது அறக்கட்டளை மூலம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இவ்வாறு பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு இதுவரை 15 கோடிக்கு மேல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் பரிசுகள் குவிந்துள்ளன. அதை இந்திய மதிப்பில் கணக்கிடும்போது 4 கோடியே 61 லட்சம் ரூபாய் அளவுக்கு பரிசுகள் குவிந்துள்ளன. இதன்மூலம் அர்ஷத் நதீமின் சொத்து மதிப்பும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.