SPORTS

சொந்த மண்ணில் வங்கதேச அணியிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான்.. டிக்ளர் செய்து வம்பில் சிக்கிய கேப்டன்

வெற்றியை கொண்டாடும் வங்கதேச அணி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேச அணி. இதுவரை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பின்டி நகரில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சவுத் ஷகில் 141 ரன்களும், முகமது ரிஸ்வான் 171 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிசை தொடங்கிய வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. 167.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களும், தொடக்க வீரர் சத்மான் இஸ்லாம் 93 ரன்களும் எடுத்தனர். 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் பந்து வீசிய வங்கதேச அணி பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியில் மூன்று வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். 55.5 ஓவர்கள் தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்க நோக்கி விளையாடிய வங்கதேச அணி, 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெறுவது என்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை சொந்த மண்ணிலேயே வங்கதேசம் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்ததை தற்போது அந்நாட்டு ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.