SPORTS

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு.. பதக்க பட்டியலில் டாப் யார் தெரியுமா?

17 நாட்கள் உலகையே தன்பக்கம் ஈர்த்த பாரிஸ் ஒலிம்பிக் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்த நிலையில், 6 பதக்கங்களுடன் இந்தியா 71-ஆவது இடத்தைப் பெற்றது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், இந்தமுறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களை கைப்பற்றியது. இதையும் படிக்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 5வது இடம்… ஆனாலும் பதக்கம் வென்ற வீராங்கனை… எப்படி தெரியுமா? துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனிநபர் பிரிவிலும், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று, ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர் என்ற சாதனைபடைத்தார். ஈட்டி எறிதலில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்த முறை வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே போல, துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசாலே, மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினர். அபாரமாக விளையாடிய இந்திய ஹாக்கி அணி கடந்த ஒலிம்பிக்கைப் போலவே வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் இந்தியா 71-ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களுடன் 48ஆவது இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தால் பதக்கப்பட்டியலில் இந்தியா 68-ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் நூலிழையில் தவறியது ஏமாற்றம் அளித்தது. துப்பாக்கி சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அர்ஜுன் பபுதாவும், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கரும் சிறிய வித்தியாசத்தில் நான்காம் இடம் பிடித்து பதக்கங்களைத் தவறவிட்டனர். கலப்பு இரட்டையர் ஸ்கீட் போட்டியில், அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் மகேஸ்வரி சவுகான் ஜோடி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வில்வித்தையில், தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஆடவர் பேட்மிண்டர் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷ்யா சென்னும், பளுதூக்குதலில் மீராபாய் சானுவும் 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர். பாரிஸ் ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில், 40 தங்கம் உட்பட 126 பதக்கங்களுடம் அமெரிக்கா முதல் இடத்தையும், அதே 40 தங்கம் வென்ற போதும் ஒட்டுமொத்தமாக 91 பதக்கங்களை மட்டுமே வென்றதால் சீனா 2-ஆவது இடத்தையும் பிடித்தது. ஜப்பான் 3-ஆவது இடத்தையும், ஆஸ்திரேலியா 4-ஆவது இடத்தையும், ஒலிம்பிக் போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-ஆவது இடத்தையும் பிடித்தன. இதையடுத்து 17 நாட்கள் உலகையே தன்பக்கம் ஈர்த்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் நேற்று நிறைவடைந்தது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.