SPORTS

பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்... கோலாகல தொடக்கம்!

ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வண்ணமயமாக நடைபெற்றது. வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரிலும், நதிக்கரையிலும் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெற்றது. 33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்திய நேரப்படி நேற்று 11 மணி அளவில் தொடங்கின. ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 1900, 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு 3 ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நகரம் நடத்துகிறது. 32 பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளன. பிரான்சின் 16 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த முறை மட்டும் 2020ஆம் ஆண்டுக்கு பதிலாக கொரோனா பெருந்தொற்றால் அடுத்த ஆண்டான 2021-ல் நடத்தப்பட்டது. 206 நாடுகளைச் சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர். வரலாற்றிலேயே முதல் முறையாக சரிபாதி அளவாக 5ஆயிரத்து250 வீரர்களும், அதே எண்ணிக்கையிலான வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் நாடுகள் மட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது. சென் நதிக்கரையில் பிரபல பாடகியான லேடி காகாவின் வண்ணமயமான கலைநகிழ்ச்சிகளில் இசைக்கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நடந்தது. மைதானத்துக்கு பதிலாக நதிக்கரையில் இசைக்கலைஞர்கள் அழகாய் நடனமாடினர். படகுகளில் வந்த வீரர்கள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இந்திய அணியினர் ககந் நரங் தலைமையில் அணிவகுத்தனர். தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இந்திய அணியின் கொடியை ஏந்திச்சென்றனர். சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர். ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை பாரிஸ் நகரில் பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் 80 ராட்சத திரைகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.