பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக இருக்கும் போகோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகிய இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல்கள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS உடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல்கள் முறையே MediaTek Dimensity மற்றும் Snapdragon உள்ளிட்ட சிப்செட்களைக் கொண்டுள்ளன. இந்தியாவில் Poco C75 மற்றும் Poco M7 Pro மொபைல்களின் விலை விவரங்கள்: Poco M7 Pro மொபைலின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆகும். இதில் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, அதே நேரத்தில் 8GB + 256GB வேரியன்ட் விலை ரூ.16,999 ஆகும். இது ஆலிவ் ட்விலைட், லூனார் டஸ்ட் மற்றும் லாவெண்டர் ஃப்ரோஸ்ட். உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் Poco C75 மலிவு விலை மொபைல் ஆகும். 4GB + 64GB என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைலின் விலை ரூ.7,999 ஆகும். இந்த 2 மொபைல்களும் விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. போகோவின் M7 Pro 5G மொபைல் ஸ்பெசிஃபிகேஷன்கள்: இந்த மொபைலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 2,100nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் ஃபுல் -எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா SoC சிப்செட் இதில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்-உடன் இந்த மொபைல் வருகிறது. Poco M7 Pro மொபைலின் பின்பக்கம் 1/1.95-இன்ச் 50-MP Sony LYT-600 பிரைமரி சென்சார் மற்றும் 2-MP டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 40-MP சென்சார் உள்ளது. Dolby Atmos டெக்னலாஜியை சப்போர்ட் செய்யும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இந்த மொபைலில் உள்ளன. இதையும் படிக்க: IP69 ரேட்டிங், 6,000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட்ட Realme 14x 5ஜி மொபைல்… இதில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய 5,110mAh பேட்டரி உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, Wi-Fi, 5G மற்றும் 4G VoLTE ஆகியவை அடங்கும். இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. போகோவின் Poco C75 5G மொபைல் ஸ்பெசிஃபிகேஷன்கள்: Poco C75 மொபைலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 600nits பீக் பிரைட்னஸை சப்போர்ட் செய்யும் 6.88-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்) ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இதில் octa-core Snapdragon 4s Gen 2 ப்ராஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட Xiaomi-ன் HyperOS-ல் இந்த மொபைல் இயங்குகிறது. இதையும் படிக்க: 5G சேவைகள்: Vi யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியிட்ட நிறுவனம்…! Poco C75 மொபைல் 50MP ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 5MP ஃப்ரன்ட் சென்சார் உள்ளது. இது 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP52 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. மேலும், சைட்-மவுண்ட்டட்ஃபிங்கர் பிரின்ட் கொண்டிருக்கிறது Poco C75. None
Popular Tags:
Share This Post:
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட் ஃபோனின் உலகளாவிய வெளியீடு எப்போது.? வெளியான அறிவிப்பு
December 20, 2024M7 Pro மற்றும் C75... இந்தியாவில் புதிதாக இரண்டு 5ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தி இருக்கும் போகோ...!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
2024இல் இந்தியாவின் டாப் டக்கரான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்... பட்டியல் இதோ
- By Sarkai Info
- December 18, 2024
Featured News
Latest From This Week
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அசத்தல் பிளான்... தினம் 2GB டேட்டா உடன் இலவச நெட்பிளிக்ஸ்
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
கோடிகளில் வருமானம் பெரும் யூடியூபர்கள்! விஜே சித்து, மதன் கவுரிக்கு எத்தனாவது இடம்?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.