TECHNOLOGY

ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட் ஃபோனின் உலகளாவிய வெளியீடு எப்போது.? வெளியான அறிவிப்பு

புதிய ஸ்மார்ட் ஃபோனை வாங்கும் முயற்சியில் உள்ளீர்களா? இந்தியா உட்பட உலக சந்தையில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஒன்பிளஸ் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் அதன் முதன்மைத் சீரிஸ் ஆன ​​ஒன்பிளஸ் 13 வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது, இதில் ஒன்பிளஸ் 13R அதே தேதியில் வெளியிடப்படும் என்று வதந்திகள் வெளியாகி வருகின்றன. ஒன்பிளஸ் 13R ஆனது ஒன்பிளஸ் 12R இன் அப்டேட் வேர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த R வேரியண்ட் ஆனது ஒன்பிளஸ் Ace 5 இன் புதிய வேரியண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டிசம்பர் 26ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13R உலகளாவிய வெளியீட்டு தேதி: ஒன்பிளஸ் சீரிஸ் ஆனது ஜனவரி 7 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படும் என்று நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஜனவரி 7, 2025 அன்று வின்டர் லான்ச் ஈவென்ட்டில் நேரடி வெளியீட்டு நிகழ்ச்சியில் இரவு 9 மணிக்கு தொடங்கப்படும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அந்த வெளியீட்டு நிகழ்த்தியில் எத்தனை மாடல்கள் வெளியிடப்படும் என்பதை ஒன்பிளஸ் அதிகாரிகள் குறிப்பிடவில்லை, ஆனால் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போன்கள் வரும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஒன்பிளஸ் 13 ஆனது ஆர்க்டிக் டாவ்ன், பிளாக் எக்ளிப்ஸ் மற்றும் மிட்நைட் ஓசன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும். ஒன்பிளஸ் 13 ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 உடன் வருகிறது. மேலும் பல AI-அடிப்படையிலான இமேஜிங் மற்றும் நோட் டேக்கிங் அம்சங்களுக்கான ஆதரவை வழங்குகிறது. OnePlus 13 எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்: ஒன்பிளஸ் 13 உலகளாவிய வேர்ஷன் ஆனது தற்போதுள்ள சீன வேரியண்ட்டிற்கு ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃபிரேஷ் ரேட், 4,500 நிட்ஸ் பீக் பிரைட்நெஸ் மற்றும் டால்பி விஷன் கொண்ட 6.82 இன்ச் குவாட்-HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஃபோன் ஆனது 24GB வரை LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஒன்போர்டு ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதையும் படிங்க: M7 Pro மற்றும் C75… இந்தியாவில் புதிதாக இரண்டு 5ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தி இருக்கும் போகோ…! கேமராவை பொறுத்தவரையில், ஒன்பிளஸ் 13 குளோபல் வேரியண்ட் ஆனது 50MP மெயின் சென்சார், 50MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP சென்சார் கொண்டுள்ளது. இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.