TECHNOLOGY

போனில் இருந்து போட்டோவை டெலிட் செஞ்சிட்டீங்களா? கவலையே வேண்டாம்.. ஈஸியா ரெக்கவர் பண்ண செம ஐடியா

கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷன் போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டு நமக்கு கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி யூஸர்கள் தங்களுடைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நிர்வகிக்கலாம். எனினும் ஒரு சில சூழ்நிலைகளில் நாம் தவறுதலாக ஒரு போட்டோவை டெலிட் செய்து விட்டு அதனை நினைத்து வருத்தப்பட்டு இருக்கலாம். அந்த போட்டோவை மீண்டும் ரெக்கவர் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்வோம். ஆனால் உண்மை அது கிடையாது. கூகுள் போட்டோஸில் உங்களால் டெலிட் செய்த போட்டோவை மீண்டும் ரீஸ்டோர் செய்ய முடியும். கூகுள் போட்டோஸ் என்பது கிளவுட் அடிப்படையிலான ஒரு சேவை. இது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி நாம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சேமிப்பது, ஃபோல்டர்களாக பிரித்து வைப்பது போன்றவற்றை செய்யலாம். உங்களுடைய போன், டேப்லட் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இது ஆட்டோமேட்டிக்காக பேக்கப் எடுத்துக் கொள்ளும். இதன் மூலமாக இன்டர்நெட் வசதி இருந்தால் எந்த ஒரு சாதனத்தில் இருந்து வேண்டுமானாலும் உங்களுடைய போட்டோக்களை நீங்கள் பயன்படுத்தலாம். கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் புத்திசாலித்தனமான தேடல்கள், நபர்கள், இடங்கள் மற்றும் பொருட்களின் அடிப்படையில் போட்டோக்களை தனித்தனியாக பிரித்து வைப்பது மற்றும் வேறு சில அற்புதமான எடிட்டிங் டூல்கள் போன்ற அம்சங்கள் உள்ளது. கூகுள் போட்டோஸில் டெலிட் ஆன போட்டோக்களை எப்படி ரெக்கவர் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டிராஷ் ஃபோல்டரில் தேடிப் பார்க்கவும் கூகுள் போட்டோஸில் ஒரு போட்டோவை நீங்கள் டெலிட் செய்த பிறகு உடனடியாக அது டிராஷ் ஃபோல்டருக்கு சென்று விடும். அங்கிருந்து அந்த போட்டோவை நீங்கள் மீண்டும் ரெக்கவர் செய்யலாம். எனினும் டிராஷ் ஃபோல்டரில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தால் மட்டுமே உங்களால் ரெக்கவர் செய்ய முடியும். ரெக்கவர் செய்வதற்கு நீங்கள் குறிப்பிட்ட அந்த போட்டோவை கிளிக் செய்து, பின்னர் ரீஸ்டோர் ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலமாக உங்களுடைய போனின் கேலரி அல்லது கூகுள் போட்டோஸ் லைப்ரரிக்கு அந்த போட்டோவை ரீஸ்டோர் செய்யலாம். ஆர்சிவ் ஃபோல்டரை சரி பார்க்கவும் ஒரு சில சமயங்களில் நாம் சில போட்டோக்களை தவறுதலாக ஆர்சிவ் செய்து விட்டு, பின்னர் மறந்து விடுவோம். அவற்றை நாம் டெலிட் செய்து விட்டதாக நினைத்துக் கொள்வோம். ஒருவேளை அப்படி உங்களால் ஒரு போட்டோவை கண்டுபிடிக்க முடியாமல் போகும்போது உங்கள் போனில் உள்ள ஆர்சிவ் ஃபோல்டரை ஒரு முறை திறந்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் தேடிக் கொண்டிருந்த போட்டோ அங்கு இருந்தால் அன்ஆர்சிவ் ஆப்ஷனை கிளிக் செய்து போட்டோவை மீண்டும் போன் கேலரியில் பெறலாம். கூகுள் சப்போர்ட்டில் இருந்து உதவி பெறுதல் *இதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய கூகுள் டிரைவுக்கு சென்று ஹெல்ப் பேஜை கிளிக் செய்ய வேண்டும். *ஹெல்ப் பேஜில் மிஸ்ஸிங் ஆர் டெலிட்டட் ஃபைல்ஸ் (Missing or deleted files) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *இங்கு நீங்கள் இரண்டு விதமான ஆப்ஷன்களை காண்பீர்கள். சாட் மற்றும் இமெயில் இந்த இரண்டில் உங்களுக்கு சௌகரியமான ஒன்றை தேர்வு செய்யுங்கள். *இங்கு நீங்கள் டெலிட் செய்த போட்டோ அல்லது ஃபைலை ஏன் மீண்டும் பெற நினைக்கிறீர்கள் என்பதை கூகுளிடம் நீங்கள் விவரிக்க வேண்டும். *சாத்தியம் இருந்தால் கூகுள் அதனை உங்களுக்கு மீண்டும் வழங்கும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.