TECHNOLOGY

IP69 ரேட்டிங், 6,000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட்ட Realme 14x 5ஜி மொபைல்...

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது ரியல்மி 14 சீரிஸின் முதல் ஸ்மார்ட் ஃபோனாக Realme 14x என்ற புதிய 5ஜி மொபைலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான IP69 ரேட்டிங்குடன் வருகிறது. இது அதிக வெப்பநிலை மற்றும் ஹை-பிரஷர் வாட்டர் ஸ்பிரேக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல் P68 ரேடிங்கையும் கொண்டுள்ளது, இது மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டென்ஸை வழங்குவதாக கூறப்படுகிறது. Realme 14x 5G மொபைலின் விலை மற்றும் சலுகை விவரங்கள்: இந்தியாவில் புதிய Realme 14x 5G மொபைலானது மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6GB ரேம்/128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8GB ரேம்/128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மொபைல் கிரிஸ்டல் பிளாக், கோல்டன் க்ளோ மற்றும் ஜூவல் ரேட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் தற்போது Flipkart, realme.com மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ரீடெய்லர்கள் மூலம் வாங்க கிடைக்கிறது. Flipkart அல்லது realme.com மூலம் Realme 14x 5G வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைத்து முக்கிய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.1,000 உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இதையும் படிக்க: 5G சேவைகள்: Vi யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியிட்ட நிறுவனம்…! Realme 14x 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்… இந்த மொபைலில் MediaTek Dimensity 6300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஜிபி வரை பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை டைனமிக் ரேமாக பயன்படுத்தலாம். இந்த மொபைல் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 1,600 சைக்கிள்ஸ்களுக்கு பிறகு சாதனம் 80% ஆரோக்கியமாக இருக்கும் என்றும், நான்கு வருடம் நிச்சயம் பேட்டரி நன்றாக இருக்கும் என்றும் நிறுவனம் உறுதி கூறியுள்ளது. ரியல்மி 14எக்ஸ் மொபைலானது 625nits பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட், 180Hz வரையிலான டச் சேம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட 6.67-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்கிரீன் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஃபோனில் 200% அல்ட்ரா வால்யூம் மோட் மற்றும் Air Gesture சப்போர்ட்டும் உள்ளது. இதையும் படிக்க: இனி QR கோடுகளை ஸ்கேன் செய்தாலே ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்…! கூகுளின் புதிய அம்சம்… இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Realme UI 5.0-ல் இயக்குகிறது. இந்த டிவைஸிற்கு நிறுவனம் இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு OS அப்டேட்ஸ் மற்றும் 3 வருட வழக்கமான செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்ஸ்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறது. இந்த மொபைலில் 50MP OmniVision OV50D பிரைமரி சென்சார் மற்றும் செகண்டரி சென்சார் உட்பட டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.