TECHNOLOGY

5G சேவைகள்: Vi யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியிட்ட நிறுவனம்...!

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் இந்தியாவில் அடுத்த வருடம் அதன் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவைகள் ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள 17 தொலைத்தொடர்பு பகுதிகளில் கிடைக்கும் என்று அறிக்கை வெளியாகி உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் ஏற்கனவே 5G சேவைகளை வெளியிட்டு 2 வருடங்கள் ஆன பிறகு, வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அதன் 5G நெட்வொர்க்குகளை 2022 ஏலத்திற்கு பிறகு வெளியிட்டது. வோடபோன் ஐடியா நிறுவனம் 5G போட்டியில் சற்று தாமதமாக நுழைந்து உள்ளது. இந்த புதிய சேவைகளை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு யூஸர்கள் ஆகிய இருவருமே பயன்படுத்திக் கொள்ளலாம். இது சம்பந்தமாக பேசிய அதிகாரப்பூர்வமான Vi நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் MDR விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக 5G சேவைகளை வெளியிட்டு உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து யூசர்களுக்கும் இந்த 5G சேவைகள் கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய திட்டம். இது குறித்த விரிவான தகவல்களை கூடிய விரைவில் வெளியிடுவோம்,” என்று அவர் கூறினார். இதையும் படிக்க: இனி QR கோடுகளை ஸ்கேன் செய்தாலே ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்…! கூகுளின் புதிய அம்சம்… இந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5G சேவைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, சிலிகுரி, கேரள மாநிலத்தில் உள்ள திருக்காகரா, உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஆக்ரா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இன்டோர், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஹைதராபாத், பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பை, பூனா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெங்களூரு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. Vi 5G சேவைகள்: விலை மற்றும் திட்டம் Vi 5G சேவைகள் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு யூஸர்களுக்கு கிடைக்கிறது. கஸ்டமர்கள் 5G சேவைகளை ₹475 திட்டம் மூலமாக பெறலாம். மறுபுறம் போஸ்ட்பெய்டு யூஸர்கள் REDX 1101 திட்டத்துடன் 5G பலன்களை அனுபவிக்கலாம். இதையும் படிக்க: Foldable iPhone: மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன் எப்போது வெளியாகும்? - வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் பீகாரைத் தவிர்த்து அனைத்து நகரங்களிலும் 3.3GHz மற்றும் 26GHz அலை ஸ்பெக்ட்ரம் அறிமுகப்படுத்தப்படும். எனினும் பீஹாரில் மட்டும் 3.3GHz மட்டுமே கிடைக்கும். மேலும், பிற நகரங்களில் வசிக்கும் Vi யூசர்கள் மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் விரைவான இன்டர்நெட் வேகங்களை தொடர்ந்து நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். வரக்கூடிய மாதங்களில் இந்த Vi 5G சேவைகள் பிற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.