TECHNOLOGY

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள 4ஜி VoLTE - வாடிக்கையாளர்களை கவரும் புதிய வசதி

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியதிலிருந்து நாள்தோறும் திரளான வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறிவருகிறார்கள். பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தரத்திலான (High Definition) கால் பேசும் வசதியும் பிஎஸ்என்எல் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண கால்களை விட அதிகமான வாய்ஸ் க்ளாரிட்டி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதனை தான் வாய்ஸ் ஓவர் எல்டிஇ (Voice Over LTE) அதாவது VoLTE என அழைப்பார்கள். பிஎஸ்என்எல் சிம் கார்டில் எவ்வாறு VoLTE சேவையை ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றி இப்பொது பார்ப்போம்: VoLTE சேவையை ஆக்டிவேட் செய்வதற்கு உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பரில் இருந்து “ACTVOLTE” என்று டைப் செய்து 5373 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பிஎஸ்என்எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டிற்கு நீங்கள் அப்க்ரேட் செய்து இருக்கும் பட்சத்தில் எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக VoLTE சேவை உங்களது பிஎஸ்என்எல் சிம் கார்டில் ஆக்டிவேட் செய்யப்படும். இந்த VoLTE சேவை 2ஜி மற்றும் 3ஜி சிம்கார்டில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நேரடியாக உங்களுக்கு அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை அணுகி உங்களது சிம் கார்டை அப்கிரேட் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கபடாது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய HD காலிங் வசதியை முழுமையாக அனுபவிப்பதற்கு உங்களது பிஎஸ்என்எல் சிம்கார்டு 4ஜி அலல்து 5ஜி – க்கு அப்கிரேட் செய்யப்படுவது கட்டாயமானதாகும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தியாவின் சில பகுதிகளில் 4ஜி சேவையே முழுமையாக விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், அதற்குள்ளாகவே பிஎஸ்என்எல் டெலிகாம் நெட்வொர்க்கின் 5ஜி சேவை இந்தியாவின் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் முதன்மையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கான வேலைகளில் அந்த நிறுவனம் மும்மரமாக இறங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பிஎஸ்என்எல் VoLTE சேவையை பயன்படுத்த முடியும். முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் டெலிகாம் சேவை கட்டணங்களை உயர்த்தியது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலையில் டெலிகாம் சேவைகளை அளித்து வருவதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். மேலும் தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ள HD காலிங் வசதி ஆகியவை மேலும் அதிக வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் பெற உதவியாக இருக்கும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.