TECHNOLOGY

இனி QR கோடுகளை ஸ்கேன் செய்தாலே ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்...! கூகுளின் புதிய அம்சம்...

முன்னதாக ‘நியர்பை ஷேர்’ (Nearby share) என்று அழைக்கப்பட்ட ‘குவிக் ஷேர்’ (Quick share) என்ற ஃபைல் டிரான்ஸ்பர் அம்சம் ஆன்ட்ராய்டு யூசர்களுக்கு ஏர் டிராப் போன்ற ஃபைல் டிரான்ஸ்ஃபர் அம்சமாக அமைகிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி இன்டர்நெட் இல்லாமல் வயர்லெஸ் முறையில் வீடியோக்கள் போன்ற பெரிய அளவிலான ஃபைல்களை கூட உங்களுடைய நண்பர்களுடன் நீங்கள் ஷேர் செய்யலாம். இப்போது இந்த குயிக் ஷேர் கருவியானது ஃபைல்களை ஷேர் செய்வதற்கு QR கோடுகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கிறது. ஆம், மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை செலுத்துவதற்கு நீங்கள் ஸ்கேன் செய்யும் அதே QR கோடுகளை பயன்படுத்தி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் ஃபைல்களை பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு அனுமதிக்கிறது. மேலும், இதனால் தங்களுடைய சாதனம் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரிவதற்கான செயல்முறையை இது தவிர்க்கிறது. ஆன்ட்ராய்டில் QR கோடு ஃபைல் ஷேரிங்: இது எப்படி வேலை செய்கிறது? பொதுவாக ஒரு QR கோடை பார்க்கும்போது, அதனை நீங்கள் ஸ்கேன் செய்தாலே நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறிவிடும். அவ்வாறுதான் இந்த குயிக் ஷேர் அம்சமும் வேலை செய்கிறது. ஒருவேளை நீங்கள் மற்றொரு ஆன்ட்ராய்டு யூசருடன் ஃபைல்களை ஷேர் செய்ய நினைப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சாதனத்தை சுற்றி இருக்கும் நபர்களுக்கு காட்டுவதில் விருப்பமில்லை எனும்போது, நீங்கள் ஒரு ஃபைலை அனுப்புவதற்கு முயற்சி செய்யும் சமயத்தில் இந்த ஃபைலை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஒரு QR கோடை உருவாக்குவதற்கான ஆப்ஷனை போன் உங்களுக்கு வழங்கும். இதையும் படிக்க: அடுத்த ஆண்டு வெளியாகும் புதிய புராடக்ட்.. ஆப்பிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்! இப்பொழுது அந்த நபர் ஸ்கேனர் மூலமாக உங்களுடைய போனில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது வெறுமனே போனில் கேமராவை திறந்து QR கோடில் காட்டினாலே இந்த இரண்டு சாதனங்களுக்கு இடையில் ஃபைல் டிரான்ஸ்ஃபர் செயல்முறை நடைபெற ஆரம்பித்துவிடும். இந்த ஆப்ஷனைப் பெற்றிருப்பது நீங்கள் இருக்கும் பகுதியில் எந்த ஒரு நெட்வொர்க் இல்லாவிட்டாலும் கூட வேலை செய்யும். இந்த புதிய அம்சம் டிசம்பர் 2024 அப்டேட்டில் வெளியாகிறது. ஆனால், இப்போதைக்கு இது குறிப்பிட்ட சில சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். வரக்கூடிய வாரங்களில் இந்த அம்சம் பிக்சல் மாடல்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது அனைத்து சாதனங்களுக்கும் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதையும் படிக்க: பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள 4ஜி VoLTE - வாடிக்கையாளர்களை கவரும் புதிய வசதி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு QR கோடுகளை பயன்படுத்துவது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் போகலாம். ஆனால், உண்மையை சொல்லப்போனால், கூகுள் இந்த அம்சத்தை யூசர்களுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. பொது இடத்தில் சாதனங்கள் ஹேக் செய்யப்படுவதை தடுப்பதற்கு குறிப்பாக இந்த அம்சம் உதவியாக இருக்கும். எனவே பாதுகாப்பான முறையில் நீங்கள் நினைக்கும் நபர்களோடு ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.