TECHNOLOGY

வாட்ஸ்அப்  யூசர்கள் இனி தங்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் சாட்டை டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும்!

வாட்ஸ்அப் யூசர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஒரு முக்கிய வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது எதிர்ப்புறம் சாட் செய்பவர் எந்த மொழியில் சாட் செய்தாலும் அதனை நமது விருப்பத்திற்கு ஏற்ற மொழியில் மொழிபெயர்ப்புசெய்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. உலக அளவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் இந்த புதிய அப்டேட்டின் மூலம் மேலும் பல புதிய யூசர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப் யூசர்களின் பிரைவசியை பாதுகாக்கும் பொருட்டு இந்த ட்ரான்ஸ்லேஷன் பிராசஸ் ஆனது முழுக்க முழுக்க அந்தந்த யூசர்களின் டிவைஸுகளுக்கு உள்ளாகவே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூசர்கள் அனுப்பும் மெசேஜ்கள் சர்வருக்கு செல்லாமல் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் (end to end encryption) ஆக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் போது யூசர்களின் மெசேஜ்ஒரு கிளவுட் சர்வருக்கு அனுப்பப்படும் . அங்கிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டபிறகே எதிர்புறம் இருப்பவருக்கு அந்த மெசேஜ் அனுப்பப்படும். ஆனால் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப் போகும் இந்த புதிய ட்ரான்ஸ்லேஷன் வசதியில் மூன்றாம் தரப்பு செயலிகள் நல்லது சர்வர்கள் ஏதும் பயன்படுத்தப்பட போவதில்லை. அதற்கு பதிலாக யூசர்கள் தங்களது மொபைலிலேயே ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள லாங்குவேஜ் பேக்களை கொண்டு ட்ரான்ஸ்லேஷன் பிராசஸ் ஆனது நிகழ்த்தப்படும். எவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு வேலை செய்கிறது இந்த மொழிபெயர்ப்பு வசதியை முழுமையாக அனுபவிப்பதற்கு வாட்ஸ் அப் யூசர்கள் முதலில் தாங்கள் ட்ரான்ஸ்லேட் செய்ய விரும்பும் லாங்குவேஜ் பேக்கை தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ட்ரான்ஸ்லேட் செய்யப்படும் நேரத்தில் இணையதள வசதி இல்லை என்றால் கூட வாட்ஸ்அப் யூசர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் மெசேஜை மொழிபெயர்ப்பு செய்து பார்க்க முடியும். இதன் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இந்த வசதியை வாட்ஸ் அப் யூசர்கள் பயன்படுத்தலாம். மேலும் வாட்ஸ்அப் யூசர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட மெசேஜை மட்டுமே ட்ரான்ஸ்லேட் செய்ய வேண்டுமா அல்லது ஒட்டுமொத்த வாட்ஸ் அப் சாட்டையே ட்ரான்ஸ்லேட் செய்ய வேண்டுமா என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் கேசவலாக சாட் செய்வதற்கும், அலுவலக ரீதியான தகவல் தொடர்புகளுக்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் இந்த மொழிபெயர்ப்பு ஆஃப் லைனை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் முழுக்க முழுக்க துல்லியமாக இருக்கும் என்பதை உறுதிப்பட கூற இயலாது. ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள லாங்குவேஜ் பேக்குகளில் இருந்து மட்டுமே இந்த மொழிபெயர்ப்பானது வேலை செய்யும். அதே சமயத்தில் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் முடிந்த அளவு எளிமையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்துவதில் சில அளவுகோல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் உலக அளவில் அனைத்தும் யூசர்களும் எந்தவித சிரமமும் இன்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதற்கு இது ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தங்களுக்கிடையே மிகவும் எளிமையாக உரையாடிக் கொள்ள இது உதவும். இதையும் படிங்க: Whatsapp’s update: பார்க்காத மெசேஜையும் இனி பார்க்க வைக்கலாம்…! வாட்ஸ்அப் தரும் புதிய அப்டேட்! தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த வசதியானது இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளதாகவும், எப்போது இது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்ற விபரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வசதி முழுமையாக உருவாக்கப்பட்டு சோதனை செய்த பின்னர் வாட்ஸ்அப் - ன் பீட்டா வெர்ஷனில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.