TECHNOLOGY

ரீல்ஸ்களின் தரத்தை குறைக்கும் இன்ஸ்டாகிராம்.. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்... என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு சமூக ஊடக தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இது அதிகப்படியான யூசர்களைக் கொண்டிருப்பதில் இருந்து அதன் பிரபலத்தை நம்மால் அறிய முடிகிறது. யூசர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்கி அதில் பதிவிடுகிறார்கள். வெளியான தற்போதைய அறிக்கைகளின்படி, இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் தரம் இப்போது குறையக்கூடும் என்று கூறியுள்ளது. இது ஏன் செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி சமீபத்தில் கூறியதாவது, “அதிக பார்வைகள் அல்லது லைக்ஸ் பெறாத வீடியோக்களின் தரத்தை இன்ஸ்டாகிராம் குறைக்கும். அதாவது குறைவான நபர்கள் உங்கள் வீடியோவைப் பார்த்தால் அல்லது அதற்கு எதிர்வினையாற்றினால், இன்ஸ்டாகிராம் ஆனது அந்த வீடியோவின் தரத்தை குறைக்கும். இந்தச் செய்தி இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், குறிப்பாக குறைவான ஃபாலோவேர் உள்ளவர்களுக்கு கவலையளிக்கிறது. தரம் குறைந்த வீடியோக்கள் ஆனது அவர்களின் வீடியோக்களின் தரத்தைக் குறைத்து, அதிகப் பார்வைகள் பெறுவதை கடினமாக்கலாம். சில யூசர்களின் வீடியோவில் தரம் குறைந்தாலும் அதிக வித்தியாசத்தை வெளிக்காட்டாமல் இருக்கலாம். ஆனால் விவரங்களைக் கொண்ட வீடியோக்களில் தரம் குறைக்கப்பட்டால், அது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு சிக்கலாக இருக்கலாம். இன்ஸ்டாகிராமில் பல யூசர்கள் உள்ளனர். அதனால் அனைவருக்கும் உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை சேமிப்பது கடினம். எனவே, இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமடையாத வீடியோக்களின் தரத்தை குறைக்கலாம்.” என்று கூறினார். இதையும் படிங்க : 775 அறைகள், 19 ஸ்டேட் ரூம்கள்… உலகின் மிக விலை உயர்ந்த வீடு எங்கு உள்ளது தெரியுமா? மேலும் இன்ஸ்டாகிராமின் இந்த நடைமுறையானது பிரபலமான கிரியேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பல யூசர்கள் கவலை தெரிவித்தனர். பிரபலமான கிரியேட்டர்களுக்கு வழங்கப்படும் உயர்தர வீடியோக்கள், அவர்களின் பிரபலத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், மற்றவர்கள் வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெறுவது கடினம் என்றும் அவர்கள் கூறினார். இதற்கு பதிலளித்த மொஸ்ஸெரி, “உங்கள் கவலை சரியானது. ஆனால் வீடியோ தரத்தில் ஏற்பட்ட மாற்றம் பெரிய அளவில் இல்லை என்பதால், தரத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது,” என விளக்கம் அளித்துள்ளார். கிரியேட்டர்களுக்கான உதவிக்குறிப்புகள்: 1. அனைவறையும் ஈர்க்கக்கூடிய கன்டென்ட்-ஐ உருவாக்கவும்: அதிக விருப்பங்கள், கருத்துகள் மற்றும் ஷேர்களைப் பெறும் கன்டென்ட்-ஐ உருவாக்கவும், இதனால் அதிகமான மக்கள் உங்கள் கன்டென்ட்-ஐ பார்க்க முடியும். இது உங்கள் வீடியோவின் தரத்தை அதிகரிக்கும். 2. வீடியோவை நல்ல தரத்தில் பதிவேற்றவும்: வீடியோவை நல்ல தரத்தில் பதிவேற்றவும், இதனால் அதிகமானோர் விரும்பி அதன் ரீச் அதிகரிக்கும். 3. குறுகிய வீடியோக்களை உருவாக்குங்கள்: குறுகிய வீடியோக்கள் மிகவும் ஈர்க்கக்கூடியவை. எனவே குறுகிய வீடியோக்களை உருவாக்க முயற்சிக்கவும். ஏனெனில் அதிகமானோர் குறுகிய வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறார்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.