TECHNOLOGY

கேமிரா, பேட்டரி பவர், கலர்.. அனைத்திலும் அசத்தும் Oneplus 13.. இத்தனை சிறப்பு அம்சங்களா

பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் OnePlus 13 மொபைலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலின் லேட்டஸ்ட் டீஸர்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் மாடலான OnePlus 13 மொபைலின் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் மற்றும் பிற முக்கிய ஸ்பெசிஃபிகேஷன்கள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அதே போல OnePlus 13 மொபைலானது நிறுவனத்தின் முந்தைய மாடலான OnePlus 12-ஐ விட அதிக IP ரேட்டிங்கை வழங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய மொபைல் மேம்படுத்தப்பட்ட ஃபிங்கர்-பிரின்ட் சென்சாருடன் வந்துள்ளது. கூடுதலாக OnePlus 13-ன் பேட்டரி திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. Weibo மூலம் வந்துள்ள OnePlus 13 மொபைலானது IP68 மற்றும் IP69 ரேட்டிங்ஸ்களுடன் அறிமுகமாகியுள்ளது. OnePlus 12 மொபைலானது IP65 ரேட்டிங்ஸுடன் வந்திருப்பது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. IP68 ரேட்டிங் பெற்றிருப்பதன் மூலம், இந்த மொபைல் 1.5 மீட்டர் ஆழம் வரை நீரில் மூழ்கினாலும் 30 நிமிடங்கள் வரை தாங்கும் திறன் கொண்டதை குறிக்கிறது. அதே நேரம் IP69 ரேட்டிங் என்பது ஹை-பிரஷர் வாட்டர் ஜெட்டை தாங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. IP68 மற்றும் IP69 ரேட்டிங்ஸ் மார்க்கெட்டில் உள்ள சில சிறந்த போன்களை விட OnePlus 13-ஐ சிறந்ததாக வைக்கிறது. பிரீமியம் மாடலான ஐபோன் 16, சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மற்றும் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகியவை IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 13 மொபைலானது பாதுகாப்புக்காக அல்ட்ரா-சோனிக் ஃபிங்கர்-பிரின்ட் சென்சாரை கொண்டுள்ளது. இது 602 மிமீ ஸ்கொயர் சூப்பர் பெரிய மோட்டார் வால்யூமுடன் கூடிய புதிய பயோனிக் வைப்ரேஷன் மோட்டார் டர்போவை கொண்டிருக்கிறது. மேலும் Weibo யூஸரால் நடத்தப்பட்ட பேட்டரி சோதனை முடிவு, 6,000mAh பேட்டரியுடன் கூடிய OnePlus 13 மூன்று மணிநேர லைட் பேட்டரி சோதனையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த மொபைல் 6 மணி நேர ஹெவி பேட்டரி சோதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையும் படியுங்கள் : OnePlus OxygenOS 15 | இன்று விற்பனைக்கு வருகிறது OnePlus OxygenOS 15 : சிறப்பம்சங்கள் என்னென்ன? ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே OnePlus 13 பற்றிய பல விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ColorOS 15 மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய BOE’ன் ஓரியன்டல் X2 8T LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்டவை அடங்கும். இந்த மொபைலில் Snapdragon 8 Elite SoC ப்ராசஸர் இருக்கும் என்பதும் மூன்று 50-மெகாபிக்சல் சென்சார்கள் உட்பட ஹாசல்பிளாட் பிராண்டட் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.