TECHNOLOGY

அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 13, ஐக்யூ 13 ஸ்மார்ட்போன்கள்!

இந்த ஆண்டின் ஸ்மார்ட் போன்களின் முக்கிய வெளியீடுகளில் ஒன்பிளஸ் 13, ஐக்யூ 13, சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ, லாவா அக்னி 3 மற்றும் இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சக்திவாய்ந்த மற்றும் ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வந்துள்ளன. செப்டம்பர் மாதம் ஐபோன் 16 சீரிஸ், விவோ டி3 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ரேசர் 50 உள்ளிட்ட பல முக்கிய மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் தீபாவளியை முன்னிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது குறித்த விரிவான தகவலை இங்கே பார்க்கலாம். ஒன்பிளஸ் 13: ஒன்பிளஸ் அதன் முதன்மையான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன், அக்டோபர் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசசருடன் வரும் என்றும், 6,000 mAh பேட்டரி பேக்அப் மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 13 ஆனது ஹேசல்பிளாடுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட கேமரா, வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம், 6000 mAh பேட்டரி, மற்றும் 24GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸடோரேஜ் அம்சங்களைக் கொண்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 13: விவோவின் துணை நிறுவனமான ஐக்யூ அதன் பிரீமியம் ஐக்யூ 13 தொடரை அக்டோபர் 30-ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸ் 13 ஐப் போலவே, ஐக்கூ 13 ஆனது குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசசர் மூலம் இயக்கப்படும் மற்றும் IP68 மதிப்பீட்டையும் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது 16ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 13 ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.7 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளேயுடன், ஒரு பெரிய 6,150mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ: சாம்சங் தனது சமீபத்திய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்24 எஃப்இ-ஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 3 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் எக்சினோஸ் 2400e சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. லாவா அக்னி 3: இந்தியாவில் லாவாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான, லாவா அக்னி 3 தீபாவளியை ஒட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி 3 ஆனது 6.78-இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்டில் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது, CMF ஃபோன் 1 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவில் நாம் பார்த்த அதே சிப்செட்டான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எக்ஸ் பிராசசெர் மூலம் இயக்கப்படும். இது 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜூடன் வந்துள்ளது. இதையும் படிக்க: கேமிரா, பேட்டரி பவர், கலர்.. அனைத்திலும் அசத்தும் Oneplus 13.. இத்தனை சிறப்பு அம்சங்களா அக்னி 3 பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன் 50 எம்பி ப்ரைமரி ஷூட்டர், 8எம்பி அல்ட்ரா வைட், 8எம்பி மேக்ரோ அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவுடன் வந்துள்ளது. அக்னி 3 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் லாவாவின் சொந்த UIஇல் இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 5,000mAh பேட்டரியை பேக்அப் மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இது நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்கிறது. இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப்: இன்பினிக்ஸ் சமீபத்தில் சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஜீரோ ஃபிளிப் ஆனது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 6.9 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 1056 x 1066 பிக்சல் ரெசலூசன் 3.64 இன்ச் AMOLED பேனலுடன் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மாலி G77 MC9 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது. இதையும் படிக்க: TRAI New Rule: டிசம்பர் 1 முதல் மெசேஜ் வராது..? ஜியோ, ஏர்டெல், வி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..! இதன் பின்புறத்தில் 50MP பிரைமரி சென்சார் கேமரா, 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. இதற்கிடையில், செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ காலுக்கு ஏற்றவாறு 32எம்பி முன்பக்க கேமராவும் இடம்பெற்றுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.