EDUCATION

சமத்துவம் என்பது பள்ளி வகுப்பறையில் இருந்து தான் துவங்கும் : நிகரி விருது பெற்ற ஆசிரியரின் கருத்து

நிகரி விருது பெற்ற ஆசிரியர் பள்ளிக்கூடம், வகுப்பறை என்பது ஒரு மாணவன் தன்னுடைய நாளில் அதிக நேரத்தை செலவிடும் ஒரு இடமாகும். வகுப்பறை தான் ஒரு மாணவனின் செயலை நல்ல முறையில் மாற்றி அமைக்கும். பள்ளிக்கூடத்தில் அவன் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கருத்துக்களும், அவன் எதிர்காலத்தில் எப்படி இருக்க போகிறான் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் வகுப்பறையில் சமத்துவம் வளர, மாணவர்கள் மற்ற மாணவர்களை புறக்கணிக்காமல் “அனைவருமே சமம்” என்று உணர வேண்டும். அந்த வகையில், கல்வி நிறுவனங்களிலும் வகுப்பறையில் சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் 2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறது. மேலும் நிகரி விருது தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும், பாராட்டுக் கேடயத்தையும் உள்ளடக்கியது. ஆசிரியர் என்பவர் பாடங்களைப் போதிப்பவர் மட்டுமல்ல. மாணவர்கள் மத்தியில் எல்லாவுமாய் வாழ்ந்து காட்டுபவர். ஓர் ஆசிரியரைப் பார்த்து பழகும் முறையைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை ஏராளம். மாணவர்களிடையே பாகுபாடு காட்டாமல் சமத்துவத்தை வகுப்பறைகளில் பேணும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு ‘நிகரி’ விருது அளித்து வருகிறது எழுத்தாளர் ரவிக்குமாரின் மணற்கேணி அமைப்பு. சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகம் என்பது வகுப்பறைகளின் வழியேதான் உருவாக முடியும். அதை உருவாக்கக்கூடிய முனைப்பு ஆசிரியர்களுக்கு வேண்டும். அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கவே இந்நிகரி விருது, விழுப்புரம் மாவட்டம் கொங்கரப்பட்டு கிராமத்தில் பிறந்த செந்தில் வேலன் எம்.எஸ்சி.எம்.பில்., எம்.எட் பட்டங்களைப் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், தற்போது விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர். இதையும் வாசிக்க : ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…கடைசி தேதி தெரியுமா ? பள்ளிக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காகவும், வகுப்பறை கற்றல், கற்பித்தல் மேம்பாட்டிற்காகவும் அக்கறை செலுத்துபவர், பெண் கல்வியை ஊக்குவித்தல், இடை நின்ற மாணவர்களைப் பள்ளிக்கு வரவைத்தல் - என ஏழை, எளிய மாணவர்களி கல்வியில் அக்கறை காட்டுபவர். இணைச் செயல்பாடுகள் வழியாகச் சமூகச் சமத்துவம், மானுடப் பற்று, சமூக நீதி ஆகியவற்றுக்கான தொடர் பங்களிப்புகளைச் செய்து வருபவர். கல்விக்கூடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சமத்துவத்தைப் பின்பற்றி, அதை இளைய தலைமுறையினரிடையே பரப்பி வரும் செந்தில் வேலன் பணிகளைப் பாராட்டும் விதமாக நிகரி சமத்துவ ஆசிரியர் விருது, செப்டம்பர் 1 ஆம் தேதி திண்டிவனத்தில், நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நிகரி விருது வழங்கப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் செந்தில் வேலன் கூறுகையில், மாணவர்கள் எப்போதும் வகுப்பறையில் மற்ற மாணவர்களை புறக்கணிக்காமல் அனைவருமே சமமாக நினைத்து பழக வேண்டும். ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்கள் மத்தியில் சமத்துவம் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் குறித்து பேசுவதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். மாணவர்கள் மத்தியில் எழுந்து வரும் முரண்பாடுகளை களைந்து, மாணவர்களின் சமத்துவ வழியில் வளர நான் பாடுபடுவேன் என செந்தில்வேலன் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.