EDUCATION

கல்விக் கடன் வாங்கியிருக்கீங்களா? EMI தொகையை குறைக்க எளிய வழி!

உயர்கல்வி படிப்பதற்கு பெரும்பாலான நபர்கள் கல்வி கடனை நாடுகின்றனர். ஆனால் இதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிக்கல் மாத EMI ஆக தான் இருக்க வேண்டும். எனினும் இதனை சமாளிப்பதற்கும் உங்களுடைய EMI தொகையை குறைப்பதற்கும் பல்வேறு விதமான வழிகள் உள்ளன. அதற்கான சில யுக்திகளை இப்போது பார்க்கலாம். திருப்பி செலுத்தும் கால அளவை அதிகரிப்பது உங்களுடைய மாத EMI குறைப்பதற்கு இருக்கக்கூடிய எளிமையான வழி இது. நீண்ட கால அளவை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது உங்களுடைய மாத EMI தொகை நிச்சயமாக குறையும். எனினும் இது உங்கள் மீது உடனடி அழுத்தத்தை குறைக்க உதவினாலும் இந்த கடனுக்காக நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி அதிகமாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சலுகை காலம் உங்களுடைய கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆரம்பிப்பதற்கான அவசியம் இல்லாத சலுகை காலத்தை பெரும்பாலான கல்வி கடன்கள் வழங்குகின்றன. இந்த காலம் பொதுவாக நீங்கள் உங்கள் பட்டப்படிப்பை முடித்த 6 முதல் 12 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் ஒரு வேலையை தேடி சம்பாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் EMI செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. குறைந்த வட்டி விகிதம் வெவ்வேறு கடன் வழங்குனர்கள் வெவ்வேறு வட்டி விகிதங்களில் கல்வி கடனை வழங்குகின்றன. எனவே சிறந்து வட்டி விகிதங்கள் எங்கு கொடுக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு அந்த வங்கியை நாடுவது அவசியம். அதே நேரத்தில் உங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தை வழங்கும்படி உங்கள் கடன் வழங்குனரிடம் நீங்கள் கோரிக்கை வைக்கலாம். இயன்ற போதெல்லாம் கடனை திருப்பி செலுத்துதல் நிலுவையில் உள்ள முதல் தொகையை உங்களால் இயன்ற போதெல்லாம் முன்கூட்டியே செலுத்துவது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையையும், EMI தொகையையும் குறைக்கும். எனவே உங்களுக்கு வரும் போனஸ், வரி, ரீஃபண்டுகள் அல்லது அதிகப்படியான வருமானம் போன்றவற்றை இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வரி பலன்கள் வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80E இன் கீழ் நீங்கள் கல்விக் கடனுக்காக செலுத்தும் வட்டிக்கு கழிவு தொகை கோரலாம். எனினும் இது நேரடியாக உங்களுடைய EMI தொகையை குறைக்காது. ஆனால் வரி சேமிப்புக்கு இது மிகவும் உதவும். எனவே இன்கம் டேக்ஸ் தாக்கல் செய்யும் பொழுது இந்த பலனை கிளைம் செய்ய மறக்காதீர்கள். கடனை ஒருங்கிணைப்பது ஒருவேளை உங்களிடம் பல கடன்கள் இருந்தாலும் அல்லது அதிக வட்டிக்கொண்ட கல்வி கடனை வாங்கி இருந்தாலும் அதனை குறைந்த வட்டியிலான ஒரே ஒரு கடனாக மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு உங்களுக்கு உதவுகின்றன. ஆனால் இதில் ஒரு சிறிய அளவு கட்டணம் அடங்கி இருக்கும். எனவே அது குறித்த விவரங்களை தெரிந்து கொண்ட பிறகு இந்த முயற்சியில் ஈடுபடுவது நல்லது. ஸ்காலர்ஷிப் ஒரு சில ஸ்காலர்ஷிப்கள் கடனை தள்ளுபடி செய்வது அல்லது பாதி அளவு கடனை திருப்பி செலுத்துவது போன்ற நன்மைகளை வழங்கும். ஒருவேளை நீங்கள் இந்த மாதிரியான கல்வி கடன் தள்ளுபடிகளுக்கு தகுதி பெறுகிறீர்களா என்பதை அடிக்கடி சரி பார்க்க வேண்டும். இதையும் படியுங்கள் : மாணவர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்! சேலரி இன்கிரிமெண்ட்கள் உங்களுடைய கெரியரில் நீங்கள் முன்னோக்கி செல்லும் பொழுது அதிகமாக சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய EMI பேமெண்டையும் நீங்கள் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உங்களுடைய லோன் கால அளவை குறைத்து உங்களுடைய ஒட்டுமொத்த வட்டி தொகையை குறைத்து விடும். வருமானம் அடிப்படையிலான திருப்பி செலுத்தும் திட்டம் ஒரு சில வங்கிகள் வருமானம் அடிப்படையிலான பணத்தை திருப்பி செலுத்தும் திட்டங்களை வழங்குகின்றன. இந்த சூழ்நிலையில் உங்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு உங்களுடைய EMI தொகை நிர்ணயிக்கப்படும். இது போன்ற திட்டங்களில் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் சிறிய அளவு EMI செலுத்தினாலே போதுமானது. தேவையில்லாத செலவுகள் பட்ஜெட் என்பது உங்களுடைய பொருளாதார ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக நீங்கள் லோன் ரீபேமெண்ட் போன்றவற்றை சமாளித்து வருகிறீர்கள் என்றால் நிச்சயமாக ஒரு பட்ஜெட்டை அமைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது உங்களுடைய EMI தொகையை திறம்பட சமாளிப்பதற்கு உதவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.