EDUCATION

மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்!

தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், படிப்புகள் குறித்த விவரங்களை வழங்கும் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக் கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக உதவி மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், அலுவலக நடைமுறைகள் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த உதவி மையங்கள் செயல்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். Also Read | Weather Update | 6 மாவட்டங்களில் இன்று கனமழை.. 7 நாட்களுக்கு தொடரும் - வானிலை மையம் எச்சரிக்கை! உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும் என்றும், இந்த உதவி மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / கல்வி / மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்! மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்! உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும் படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : November 9, 2024, 3:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், படிப்புகள் குறித்த விவரங்களை வழங்கும் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக் கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக உதவி மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விளம்பரம் அதன்படி, பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், அலுவலக நடைமுறைகள் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த உதவி மையங்கள் செயல்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். Also Read | Weather Update | 6 மாவட்டங்களில் இன்று கனமழை.. 7 நாட்களுக்கு தொடரும் - வானிலை மையம் எச்சரிக்கை! உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும் என்றும், இந்த உதவி மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: College Admission , Education , higher education , Latest News , Tamilnadu First Published : November 9, 2024, 3:25 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.