EDUCATION

நீலகிரி மாவட்டத்தின் முதல் பள்ளி... முன்வந்து உதவும் முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்...

உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அமைந்துள்ள உபதலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியே நீலகிரி மாவட்டத்தின் முதல் போடிங் பள்ளி என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இங்குள்ள மக்களின் கல்வித் தேவையை அறிந்து சுற்றுப்புற மக்களுக்காக இந்த கிராமத்தில் பள்ளி உருவாக்கியவர் ராவ் பகதூர் பெள்ளி கவுடர். இந்தப் பள்ளியில் கல்வி பயின்று உயர்ந்த பதவிகளில் உள்ளோர் ஏராளம். தற்பொழுதும் சிறப்பான முறையில் இயங்கி வரும் உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி சிறந்த விருதுகள் மற்றும் ஹாக்கி விளையாட்டிற்குப் பெயர் போன பள்ளியாக விளங்கி வருகிறது. அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளி, முன்னாள் மாணவர்களால் சிறந்த முயற்சி எடுக்கப்பட்டுச் சிறப்பானதாக விளங்கி வருகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் இந்த பள்ளியின் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த பள்ளியில் சிறப்பாகப் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இதனைப் பயன்படுத்தும் விதமாக அறிவுறுத்தியுள்ளார். மேலும் மற்றொரு மாணவர் 100 பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கு அருகே உள்ள சாய் டிரஸ்ட் மூலமாகப் பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: தாறுமாறான சுவையில் தட்டு வடை செட்… இந்த சேலத்து நொறுக்குத் தீனியின் சுவை ரகசியம் தெரியுமா… மேலும் அரசு சார்பிலும் பல்வேறு உதவிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியைத் தமிழகத்தில் முதல் பள்ளியாக உயர்த்தும் அளவிற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்திலும் இதர செயல்பாடுகளிலும் முழு வீச்சில் ஆர்வம் காட்டி வருகிறோம் என தெரிவிக்கின்றார் இப்பள்ளியைத் தலைமை ஆசிரியர். மேலும் உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஐயரின் ரெஜி கூறுகையில், “இந்த பள்ளி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராவ் பகதூர் பெள்ளி கவுடரால் ஏழை மக்களின் கல்வி தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நடந்து வந்து இங்கு கல்வி பயின்றுள்ளனர். நீலகிரியின் முதலாவது போர்டிங் ஸ்கூல் என்ற பெருமையை இந்த பள்ளி பெற்றுள்ளது. இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நீலகிரி முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அக்கமா தேவி பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுள்ளார்கள். அவர்கள் தற்போது உலகின் பல்வேறு திசைகளிலும் பதவிகளிலிருந்து வருகிறார்கள். இதையும் படிங்க: சொந்த ஊரிலே எளிய முறையில் சிறந்த லாபம் எடுக்கலாம்… நாட்டு மாடு வளர்க்கும் ஐடி ஊழியர்… இடையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது அதன் பின்னர் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வம் எடுத்து மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். ஹாக்கி போட்டி, கபடி போட்டி ஆகியவற்றில் சிறப்பாக மாணவர்கள் செயல்பட்டு வருகின்றனர். பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக இந்த பள்ளி சிறந்த எஸ்எம்சி பள்ளி என்ற விருதைப் பெற்றது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் 10 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையும் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அதனைக் கொண்டு இந்த பள்ளிக்கு வர்ணம் பூசப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி விகிதத்தில் இந்த பள்ளி சிறப்பாக விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது” எனவும் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.