EDUCATION

UGC: "இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம்" - UGC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

12-ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக 12ஆம் வகுப்பு அல்லது நிலை 4ல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும். அதேபோல் தான் சேர விரும்பும் துறையில் தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் அவர் வெற்றி பெற வேண்டும். இதேபோல இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையில் படித்த ஒரு மாணவரும், சம்பந்தப்பட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் முதுகலையில் எந்த துறையையும் தேர்ந்தெடுக்க முடியும். Also Read: Rain Holiday: நாளைக்கும் லீவு… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்பு நிறுவனங்களின் கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை இளங்கலை 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் நேரடி சேர்க்கை நடத்தலாம். இதேபோல முதுகலை பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு நேரடியாக அனுமதிக்க முடியும். பாடத்திட்டம் மற்றும் கடன் கட்டமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு, நிறுவனம் மற்றும் கற்றல் முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாணவர் நேர நேரத்தில் இரு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை தொடரலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. “உலகளாவிய தரத்தை எட்டுவதை உறுதி செய்கிறோம்” இதுதொடர்பாக யுஜிசி தலைவர் கூறுகையில், 2024ஆம் ஆண்டு வரைவு யுஜிசி விதிமுறைகள், நெகிழ்வுத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் தகவமைப்புத் தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் உயர்கல்வியை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறை எல்லைகளை அகற்றுவதன் மூலம், மாணவர்கள் இப்போது பல்வேறு கற்றல் வாய்ப்புகளை ஆராயலாம். இது இந்தியாவின் கல்வி முறை உலகளாவிய தரத்திற்கு வளர்ச்சியடைவதை உறுதி செய்கிறது என்றார். மேலும், யு.ஜி.சி. புதிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கடந்தகால பாடப்பிரிவு தகுதியை பொருட்படுத்தாமல் எந்தவொரு துறையிலும் படிக்கலாம். இந்த சீர்திருத்தங்கள் மூலம், இந்திய உயர்கல்வி உலகளாவிய தரத்தை எட்டுவதை உறுதி செய்கிறோம் என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.