EDUCATION

சிறந்த கல்லூரிகள் தரவரிசையில் சிறப்பான இடம்... பெருமையைத் தக்க வைத்த தென்னகத்து ஆக்ஸ்போர்டு...

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பழமையான பல கல்வி நிலையங்களைக் கொண்டிருப்பதால் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும். பாளையங்கோட்டையில் சிறிது தூரங்களுக்கு இடையே பள்ளி, கல்லூரிகள் நிறைந்திருக்கும். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு நகரம் கல்வியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திகழ்வதால் தான் தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றுக்கு அருகே உள்ள பாளையங்கோட்டையில் 1879ஆம் ஆண்டு மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி தொடங்கப்பட்டது. 1880இல் சேவியர் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு முன்பு 1843ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை உருவாக்கியவர் வெறும் 14 வயது மாற்றுத்திறனாளியான சாரல் டக்கர் என்ற ஆங்கிலேயர் ஆவார். இதையும் படிங்க: சொந்தமா தறி ஓட்டினால் லாபம் பார்க்க முடியும்.. இயந்திர நகரத்தில் இன்றும் இயங்கும் கைத்தறி இவரின் சகோதரர் ஜான் டக்கர் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். பெண்களுக்குக் கல்வியைக் கொடுக்க நினைத்துள்ளார். அண்ணனின் விருப்பத்தைச் சாரல் டக்கர் நிறைவேற்ற வேண்டி தனது 24 பவுன் நகையை அண்ணனிடம் கொடுத்துள்ளார். அவரது அண்ணனும் கல்லூரியை பாளையங்கோட்டையில் ஆரம்பித்தார். இந்த கல்லூரி முதன்முதலாக கடாசபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1857இல் சாரல் டக்கர் மேல்நிலைப்பள்ளி ஆரம்பமானது. பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகள் 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. பாளையங்கோட்டையில் மட்டும் தான் கண் தெரியாதவர், காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்களுக்காகப் பள்ளிகள் உள்ளன. குறிப்பாக சேவியர் கல்லூரி 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்நிலையில் அகில இந்திய அளவில் வெளியிடப்பட்ட சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டியலில் திருநெல்வேலி சேவியர் கல்லூரி 36வது இடமும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி 98வது இடமும் பெற்றுள்ளது. இதே போல் சிறந்த பல்கலைக்கழகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93வது இடம் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாகக் கல்வியில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள நகரம் இன்னமும் அதன் பெருமையைத் தக்க வைத்திருப்பது அம்மக்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.