EDUCATION

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்...

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? பொதுவாக பள்ளி படிப்பை முடித்த பின்னர் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. படிக்காத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. முதல் பட்டதாரி சான்றிதழை வைத்து உயர் கல்வி படிக்க கட்டண சலுகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற முடியும். இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி,தேவையான ஆவணங்கள் என்னென்ன, என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஃபோட்டோ, ஏதேனும் ஒரு முகவரி சான்றிதழ், மாணவரின் மாற்றுச் சான்றிதழ், விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர் படித்திருந்தால் அவர்களின் மாற்றுச் சான்றிதழ், அதே போல் மாணவரின் உடன் பிறந்தவர்கள் படித்திருந்தால் அவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கி இருக்க கூடாது. மேலும் உடன் பிறந்தவர்கள் படித்துக் கொண்டிருந்தால் அவர்களின் உறுதி சான்றிதழ் (Bonafide ) ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும். இதனை வைத்து இ சேவை மையங்களில் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப கட்டணம் இ-சேவை மையங்களில் ரூபாய் 60 ஆகும். வீட்டில் இருந்தே இணைய தள சேவையை பயன்படுத்தி டி.என்.இ.ஜி.ஏ (TNeGA) என்ற இணையதளத்தில் சென்று அங்கு விண்ணப்பிக்க புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர் பெயரில் யூசர் ஐடி லாகின் செய்து விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பித்த பிறகு அதிகபட்சமாக 5 நாட்களில் சான்றிதழ் கிடைத்து விடும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்... முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்... முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? First Graduate Certificate| முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு காணலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 9, 2024, 5:54 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் பொதுவாக பள்ளி படிப்பை முடித்த பின்னர் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. படிக்காத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. முதல் பட்டதாரி சான்றிதழை வைத்து உயர் கல்வி படிக்க கட்டண சலுகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற முடியும். இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி,தேவையான ஆவணங்கள் என்னென்ன, என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . விளம்பரம் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஃபோட்டோ, ஏதேனும் ஒரு முகவரி சான்றிதழ், மாணவரின் மாற்றுச் சான்றிதழ், விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர் படித்திருந்தால் அவர்களின் மாற்றுச் சான்றிதழ், அதே போல் மாணவரின் உடன் பிறந்தவர்கள் படித்திருந்தால் அவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கி இருக்க கூடாது. மேலும் உடன் பிறந்தவர்கள் படித்துக் கொண்டிருந்தால் அவர்களின் உறுதி சான்றிதழ் (Bonafide ) ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும். இதனை வைத்து இ சேவை மையங்களில் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப கட்டணம் இ-சேவை மையங்களில் ரூபாய் 60 ஆகும். வீட்டில் இருந்தே இணைய தள சேவையை பயன்படுத்தி டி.என்.இ.ஜி.ஏ (TNeGA) என்ற இணையதளத்தில் சென்று அங்கு விண்ணப்பிக்க புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர் பெயரில் யூசர் ஐடி லாகின் செய்து விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பித்த பிறகு அதிகபட்சமாக 5 நாட்களில் சான்றிதழ் கிடைத்து விடும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Govt certificates , Local News First Published : October 9, 2024, 5:54 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.