NATIONAL

Independence Day | சுதந்திர தினம் vs குடியரசு தினம் : இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம்? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவர்?

சுதந்திர தினத்திற்கு குடியரசு தினத்திற்கும் என்ன வேறுபாடு? இரண்டும் வெவ்வேறு நாள் என்றாலும் இது பற்றி சில சந்தேகங்கள் பலருக்கு இருக்கும். இந்த இரு தினங்கள் ஏன் கொண்டாடப்படுகிறது. இந்த தினங்களில் யார் கொடியேற்றுவார் என்பது போன்ற தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். சுதந்திர தினம் என்பது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்தோம். அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை சுதந்திர தினமாகவும் அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள் குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையும் படிக்க: சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய பெண்கள் யார், யார்? சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அது உண்மை இல்லை மக்களே.. உண்மையை இந்தக் கட்டுரையில் தெரிந்தகொள்ளுங்கள். சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். ஏற்றுவதும் அவிழ்ப்பதும்.. சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, ​​​​கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவண்ணக்கொடியை அவிழ்த்து விடுவார். யார் அவிழ்ப்பார், யார் ஏற்றுவார்? ஏன்? முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவவாதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்த பணி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நபருக்கு மட்டுமே வழங்க முடியும். இதையும் படிக்க: சுதந்திர இந்தியாவில் காந்தி கொடி ஏற்றாதது ஏன்? - காந்திக்கும் தேசிய கொடிக்கும் இருக்கும் தொடர்பு - முழு விவரம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்தோம். அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கொடியை ஏற்றினார். இதனால் தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கொடி ஏற்றுகிறார். இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே சுதந்திரம் பெற்ற நாடு இப்போது குடியரசு நாடாக மட்டும் மாறுவதால் புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை ஏற்றி வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது. அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த நடைமுறை 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இடம்: இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். பிரதமர் செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார், அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில் கொடியேற்றுகிறார். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரிய நிகழ்ச்சி நாட்டின் வளத்தை உலகிற்குக் கட்டுவதற்காக நடைபெறுகிறது . None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.