NATIONAL

"நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற குற்றவியல் சட்டம் தேவை" - சுதந்திர தின விழாவில் பிரதமர் பேச்சு!

பிரதமர் மோடி நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பட்டொளி வீச தேசியக்கொடி பறந்தபோது விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, 40 கோடி மக்களால் அடிமைத்தனத்தை உடைத்து சுதந்திரம் பெற முடியும் என்றால், 140 கோடி மக்களின் உறுதியால் என்ன சாதிக்க முடியும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார். நாட்டின் பாதுகாப்புப் படைகள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொண்டதாக அவர் கூறினார். மக்கள் தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், நாட்டிற்கு மூன்று மடங்கு வேகத்தில் உழைக்கப்போவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் நாட்டின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாவதாகவும், இதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சீர்த்திருத்தங்கள் நாட்டை வலுப்படுத்தத்தானே தவிர, விளம்பரத்திற்காக அல்ல எனவும் விளக்கம் அளித்தார். இந்திய இளைஞர்கள் தற்போது மெதுவாக நடக்க விரும்பவில்லை என்றும், துள்ளிக் குதித்து, புதிய இலக்குகளை அடையும் மனநிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்றும், இந்த வாய்ப்பை கனவுகளுடனும், தீர்மானங்களுடனும் முன்னோக்கிச் சென்றால் சாதிக்க முடியும் எனவும் அறிவுறுத்தினார். புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவான நீதியை வழங்குவதை புதிய குற்றவியல் சட்டங்கள் உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி கூறினார். மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையை மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு, விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற குற்றவியல் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். 2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க வேண்டும் என்றும், அதற்கு தயாராகி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் முன்னோக்கி கொண்டு வர விரும்புவதாகவும், இது சாதிவாதத்தையும், குடும்ப அரசியலையும் உடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதையும் படிங்க: Independence Day | சுதந்திர தினம் vs குடியரசு தினம் : இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம்? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவர்? அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.