NATIONAL

வீட்டில் இருந்த நபரின் FASTag அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்தம்... வைரலான ஸ்க்ரீன்ஷாட்!

தான் வீட்டில் இருந்த நேரத்தில் தனது FASTag அக்கவுண்ட்டில் இருந்து ரூ.220 கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக டோல் பிளாசாக்கள் (toll plaza) என்றழைக்கப்படும் சுங்கச்சாவடிகளில், ஒரு குறிப்பிட்ட சாலையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதிலும் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கு முன், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் சுந்தர்தீப் சிங், தான் எந்த சாலையிலும் வாகனத்தை இயக்காமல் வீட்டில் இருந்த நேரத்தில் தனது ஃபாஸ்டாக் அக்கவுண்டில் இருந்து டோல் டேக்ஸ் அதாவது சுங்க வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை பிரபல மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபார்மான X-ல் ஷேர் செய்துள்ளார் சுந்தர்தீப் சிங். அவர் ஷேர் செய்துள்ள இந்த ஸ்கிரீன் ஷாட்டானது கடந்த ஆகஸ்ட் 14, 2024 அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சாபில் உள்ள Ladowal டோல் பிளாசாவில் அவரது FASTag அக்கவுண்ட்டில் இருந்து ரூ.220 பிடித்தம் செய்யப்பட்டதை காட்டுகிறது. இந்த ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்து “ஹாய், ஃபாஸ்டாக். நான் வீட்டில் ரிலாக்ஸாக உட்கார்ந்திருக்கும் போது எனது ஃபாஸ்டாக் அக்கவுண்ட்டில் இருந்து பணம் ஏன் கழிக்கப்பட்டது. தற்போது மட்டுமல்ல இந்த மாதத்தில் நான் அந்த வழியில் செல்லவே இல்லையே, பிறகு எப்படி பணம் கழிக்கப்பட்டது! என்ன நடக்கிறது?” என்று சுந்தர்தீப் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். சுந்தர்தீப் சிங் ஷேர் செய்துள்ள ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஆகஸ்ட் 14, 2024 அன்று மதியம் 2 மணிக்கு லாடோவால் டோல் பிளாசாவில் அவரின் FASTag கணக்கிலிருந்து ரூ.220 டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது FASTag கணக்கில் 790 ரூபாய் மீதமிருப்பதையும் அந்த ஸ்கிரீன் ஷாட் காட்டுகிறது. இந்த போஸ்ட் வைரலானதை தொடர்ந்து குறிப்பிட்ட போஸ்ட்டிற்கு பதிலளித்துள்ள FASTag, வணக்கம், தவறுதலாக பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்த சிக்கலைப் புகாரளிக்க, உங்களது Fastag-ஐ வழங்கிய வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்கள் புகாரை மதிப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் தவறாக கழிக்கப்பட்ட கட்டணத்தை சார்ஜ்பேக் செய்வார்கள். நன்றி” என குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்ட்டிற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு யூசர், கடந்த 1 வருடமாக இப்படி எங்களுக்கு அடிக்கடி நடக்கிறது. வேறு சில கார்கள் எங்கள் கார் பதிவு எண்ணை பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து சலான்களும் மற்றும் ஃபாஸ்ட் டேக் டிடெக்ஷன்களும் எங்களிடம் அனுப்பப்படுகின்றன. எண்ணற்ற காவல் நிலையம் மற்றும் வங்கிக் கிளைகளுக்கு சென்று புகாரளித்த பின்னும் இந்த நிலை தொடர்வதால் நாங்கள் இதனை ஒரு தனி வீட்டுச் செலவாகவே கருத தொடங்கினோம் என குறிப்பிட்டுள்ளார். Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! மற்றொரு யூஸர் கூறுகையில் இதே போல் எனக்கு இரண்டு முறை நடந்தது. வங்கியோ அல்லது அரசு நிறுவனமோ பதில் அளிக்கவில்லை என சாடியுள்ளார். மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் “உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக்கை ஒருபோதும் வாங்க வேண்டாம். எப்போதும் தேர்ட் பார்ட்டியிடமிருந்து இருந்து வாங்கி, பேலன்ஸ் தொகையை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பயணத்திற்கு முன் உங்கள் வாலட்டில் பணத்தை போடுங்கள் என்று யோசனை தெரிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.