NATIONAL

Tamil Live Breaking News : அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் : முடிவுக்கு வந்த வார்த்தை விவகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்க வேண்டும். அதை கோடிட்டு காட்டும் விதமாக கூட ரஜினிகாந்தின் மேடை பேச்சு இருந்திருக்கலாம். இடைக்கால முதல்வரோ, துணை முதல்வரோ எதுவாக இருந்தாலும் ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே தேடுவது ஏற்கத்தக்கது அல்ல என சீமான் கருத்து. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 10 பாஜக கொடி உள்ள காரில் அண்ணாமலை இல்லத்திற்கு வருகை தந்துள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவில் சீனியர்களை வெளியேற்ற ஸ்டாலின் நினைத்ததை ரஜினிகாந்த் மூலம் வெளிபடுத்துகிறார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து. 2026 தேர்தலில் அதிமுக உடன் யார் யார் வருகிறார்கள் என்பதை பொறுத்தே கூட்டணி அமையும் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, சிதறலும் இல்லை. ஈபிஎஸ் தலைமையின் கீழ் ஒன்றாகவே செயல்படுகிறோம் என கே.பி.முனுசாமி கருத்து. ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது கருத்து குறித்து வருத்தமில்லை என தெரிவித்திருந்தார். மேலும் நட்பு எப்போதும் தொடரும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எங்கள் நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேச்சிற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் துரைமுருகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பேச்சு குறித்து பதிலளிக்கும்போது ரஜினி குறித்து விமர்சித்திருந்தார் அமைச்சர் துரைமுருகன். இதற்கு திமுக தலைமை அதிருப்தி தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சிற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜகவில் பதவி வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த விஜயதரணி பேசியிருந்தார். இதுகுறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசையிடம் கேட்ட போது, விஜயதாரணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது, ஒரு இயல்பு தான் ஆனால் பாஜகவில் இணைந்தவர்களுக்கெல்லாம் இந்த கட்சி அங்கீகாரம் கொடுக்கும் என தெரிவித்தார். மேலும் கட்சியில் அங்கீகாரம் கிடைக்க சில நேரங்களில் சில காலதாமதம் ஆகலாம். காலதாமதம் என்று கூட சொல்ல மாட்டேன் சில காலங்கள் ஆகலாம். விஜயதரணி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. பாஜகவை பொறுத்தவரை நாடுதான் முதல், கட்சி இரண்டாவது, சுயம் மூன்றாவது. எல்லோருக்கும் அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். அதுவும் பெண்களுக்கு நிச்சயமாக பாஜகவில் அங்கீகாரம் கிடைக்கும் என தமிழிசை கருத்து. தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி. மக்களை பாதிக்கும் சுங்கக்கட்டண உயர்வை கைவிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். மேலும், சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயரும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படுவதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் வருத்தமில்லை. நம் நட்பு எப்போதும் தொடரும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி மேலும் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் என்ற கேள்விக்கு விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கருத்து. உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைக்கும் பணி காரணமாக கடந்த 5 நாட்களாக தொட்டபெட்டா காட்சி முனை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திரக் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்படவுள்ளது. அண்ணா பல்கலைகழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மோசடியாக பேராசிரியர்களை கணக்குக் காட்டிய பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது. போலி பேராசிரியர்களை வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பணிபுரியாத வகையில் தடை செய்யும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 295 பொறியியல் கல்லூரிகளில், பலவற்றில் 700 ஆசிரியர்கள் போலியாக பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 295 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 20% கல்லூரிகள் இதுவரை விளக்கம் அளித்துள்ளதாகவும், 80% கல்லூரிகள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று உள்ளே நுழைந்து 2 பீர் பாட்டில்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவர்தன் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் என்பதும் அதிமுகவில் 78 வது வார்டில் பொறுப்பில் இருப்தாகவும் கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதால் வாழ்வாதாரம் போய்விட்டதாகவும் மதுவால் குடும்பங்கள் சீரழிவதாக கூறி அண்ணா அறிவாலயத்திற்கு பீர் பாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூந்தமல்லி கிளை சிறையில் இருந்தவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவல்களை கொலை கும்பலுக்கு கொடுத்தவர்தான் ஆட்டோ ஓட்டுநரான திருமலை என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.