NATIONAL

Tamil Live Breaking News : ஆளுநர் தேநீர் விருந்து - முதலமைச்சர் பங்கேற்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைபாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுகவிற்கு உள்ளது. ஆளுநர் கொடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், அரசு சார்பாக முதலமைச்சர் பங்கேற்பார் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. நீரிழிவு, ரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டி இருப்பதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அமல்பாடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நமது வலிமையான வங்கித்துறை மாற்றங்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. எங்களது சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களாக இருக்கும். கட்டாயத்தின் கீழ் வந்ததல்ல என செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறும் 78ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கியுள்ளார். வளர்ந்த பாரதம் 2047 என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. 140 கோடி மக்களின் உறுதி மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. 40 கோடி மக்களால் அடிமைதனத்தை உடைத்து சுதந்திரம் பெற முடியும் என்றால், 140 கோடி மக்களின் உறுதியால் என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள் என டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி உரை. இஸ்ரோவின் சந்திராயன் – 3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுவிற்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறும் 78ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.