NATIONAL

பிஎம் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும்?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும்? மொத்தம் எத்தனை சதுரஅடியில் இருக்க வேண்டும்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். சொந்த வீடு என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் அனைவராலும் அதை எளிதில் கட்டவோ அல்லது வாங்கிவிடவோ முடியாது. கையில் பணம் வைத்திருக்கும் சிலர், தங்கள் வீடுகளை விரைவாகக் கட்டி முடித்துவிடுவார்கள். மற்றவர்கள் ஒரு வீட்டை வாங்குவதற்கு போதுமான பணத்தை சேமிக்க தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை பெறுவதற்கு நிதி உதவி வழங்க இந்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) . இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். உங்களால் சொந்த வீடு வாங்க முடியாவிட்டால் PMAY திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் இடையே எழும் பொதுவான கேள்வி என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் எத்தனை அறைகளுடன் வீடுகள் கட்ட வேண்டும் என்பது தான். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா விண்ணப்பதாரர்களை அரசு 4 குழுக்களாக வகைப்படுத்துகிறது. முதலாவதாக EWS என்று கூறப்படுகிறது. இது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு. LIG ​​என்ற குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், MIG-I என்ற நடுத்தர வருமானம் கொண்ட பிரிவினர் I மற்றும் MIG-II என்ற நடுத்தர வருமானம் கொண்ட பிரிவினர் II. இதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கட்டக்கூடிய வீட்டின் அளவு மாறுபடும். Also Read: சொந்த மண்ணில் வங்கதேச அணியிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான்.. டிக்ளர் செய்து வம்பில் சிக்கிய கேப்டன் EWS வகை: மொத்த பரப்பளவு 30 சதுர மீட்டர். அதாவது வீட்டின் அளவு 323 சதுர அடி மட்டுமே இருக்க வேண்டும். LIG வகை: மொத்த பரப்பளவு 60 சதுர மீட்டர். LIG பிரிவினர் கட்டும் வீட்டின் அளவு 646 சதுர அடியாக இருக்க வேண்டும். MIG-I வகை: மொத்த பரப்பளவு 160 சதுர மீட்டர். வீட்டின் அளவு 1,722 சதுர அடியாக இருக்க வேண்டும். MIG-II வகை: மொத்த பரப்பளவு 200 சதுர மீட்டர். வீட்டின் அளவு 2,153 சதுர அடியாக இருக்க வேண்டும். எத்தனை அறைகள் இருக்க வேண்டும்? PMAY திட்டத்தின் மூலம் நீங்கள் கட்டக்கூடிய வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அறைகளின் எண்ணிக்கை குறித்து அரசு எந்த விதிகளையும் வகுக்கவில்லை. சிறிய அறைகளையோ அல்லது பெரிய அறைகளையோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் கட்டிக் கொள்ளலாம். வருமான விவரங்கள்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி வருமானத்தின் அடிப்படையில் மாறுபடும். EWS வகை: விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். LIG வகை: விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். MIG-I வகை: விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். MIG-II வகை: விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ள எவரும் வேறு இடத்தில் வீடு வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களை பெற தகுதி பெற மாட்டார்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.