NATIONAL

இந்தியாவின் மிக நீண்ட ஐடி ரெய்டு - ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மட்டும் 10 நாட்கள்! எங்கு தெரியுமா?

வருமான வரித்துறை ரெய்டு என்று கேட்டவுடன் வசதி படைத்தவர்களுக்கு வியர்த்து கொட்டுவது மிகவும் சாதாரணம். ஏனெனில், நாட்டில் உள்ள பல பணக்காரர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி, ஏராளமான பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மீட்டு வருகின்றனர். இதுவரை நாட்டில் நடந்த மிகப்பெரிய வருமான வரித்துறை ரெய்டு எது, அதில் எவ்வளவு பணம் மீட்கப்பட்டது தெரியுமா? கடந்த ஆகஸ்ட் 21 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் மிக நீண்ட ஐடி ரெய்டை நடத்திய வருமான வரித்துறை குழுவினரை கௌரவித்தார். அதாவது, கடந்த ஆண்டு, ஒடிசாவில் டிஸ்டில்லரி குழுமத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் அதிகபட்சமாக ரூ.352 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. இந்தியாவில் 165 ஆண்டுகால வருமான வரித்துறை விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன், வருமான வரி புலனாய்வு முதன்மை இயக்குநர் எஸ்.கே.ஜா மற்றும் கூடுதல் இயக்குநர் குர்பிரீத் சிங் தலைமையிலான வருமான வரிக் குழுவிற்கு ‘CBDT சிறப்புச் சான்றிதழை’ வழங்கி கௌரவித்தார். குர்பிரீத் சிங், 2010 பேட்ச் இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி ஆவார். இவர் தலைமையிலான குழு கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஒடிசாவை தளமாகக் கொண்ட டிஸ்டில்லரி குழுவின் பல வளாகங்களில் ‘செயல் புலனாய்வு’ அடிப்படையில் சோதனை நடத்தியது. இதையும் படிங்க: ரயிலில் கன்ஃபார்ம் சீட் வேண்டுமா? - இப்படி தட்கல் டிக்கெட் ட்ரை பண்ணி பாருங்களேன்! அப்போது, சிக்கிய பணத்தை எண்ணுவதற்கு மட்டும் 3 டஜன் நோட்டு எண்ணும் இயந்திரங்களை ஆர்டர் செய்ய வேண்டியிருந்தது. வருமான வரித்துறையின் இந்த சோதனை 10 நாட்களாக தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில், மொத்தம் ரூ.351.8 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. இது நாட்டிலேயே ‘ஒரு ஏஜென்சியின் ஒரே நடவடிக்கையில் மிகப்பெரிய பறிமுதல்’ என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது, ​​கீழே புதைக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க பொருட்களை ஆய்வு செய்யும் வகையில், வருமான வரித்துறையினர் தரையில் ஸ்கேனிங் சக்கரத்துடன் கூடிய இயந்திரத்தை நிறுவினர். அத்துடன், பல்வேறு வங்கிகள் மற்றும் அவற்றின் ஊழியர்களின் உதவியைப் பெற்று பெரும் தொகையை எண்ணியது. இதுதான் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் மிகப்பெரிய, மிக நீண்ட நடவடிக்கை என்று கவுரவிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.