NATIONAL

சிறப்பு அந்தஸ்து ரத்து... 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல்! - வெல்லப்போவது யார்?

ஜம்மு காஷ்மீர் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவுடன் இணைந்த ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்தது. லடாக்கை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் இருந்த போது கடைசியாக, 2014-இல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 28 இடங்களைப் பிடித்த மக்கள் ஜனநாயகக் கட்சியுடன், 25 இடங்களைப் பெற்ற பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது, மெகபூபா முப்தி முதலமைச்சராக இருந்தார். இந்த கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதால் 2018-இல் ஆட்சி கவிழ்ந்தது. இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய பாஜக அரசு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதன் பின்னர், அங்கு தேர்தல் நடத்தப்படாததால், 10 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே அரசு இயங்கி வருகிறது. இதனிடையே, 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும் எனவும், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், அப்போது தேர்தல் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் ஒன்று என 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். மக்களவைத் தேர்தலின் போது ஜம்மு-காஷ்மீரில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தைப் பார்த்தோம் என கூறிய தலைமை தேர்தல் ஆணையர், மக்கள் மாற்றத்தையும், புதிய எதிர்காலத்தையும் விரும்புகின்றனர் என குறிப்பிட்டார். யூனியன் பிரதேசமானதல், தொகுதி மறுவரையரை செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீரில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-ஆக இருந்து 90-ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. தேர்தல் நடத்தப்படுவதை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. 1987-88-க்குப் பிறகு முதல் முறையாக பல கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது வித்தியாசமான அனுபவமான இருக்கும் எனவும், தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.