TECHNOLOGY

iQOO Z9s சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் ஆஃபர்கள் என்னென்ன?

விவோ நிறுவனத்திற்கு சொந்தமான iQ நிறுவனமானது இந்தியாவில் அதன் புதிய Z9s சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸின் கீழ் மிட்-ரேஞ்சு பிரிவில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த இரண்டும் வெவ்வேறு விலையில் பட்டியலிடப்படுகின்றன மற்றும் அமேசானில் கிடைக்கும். இதோ அனைத்து விவரங்களை பற்றி பார்ப்போம். iQOO Z9s: விலை, விற்பனை தேதி: iQOO Z9s ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மாடலுக்கு ரூ.19,999 விலையும், மற்றும் 8GB + 256GB மாடலுக்கு ரூ.21,999 விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. 12ஜிபி + 256ஜிபி மாடலுக்கு ரூ.23,999 விலையும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் கிரீன் மற்றும் டைட்டானியம் மேட் ஆகிய வண்ண வகைகளில் ஆகஸ்ட் 29 முதல் விற்பனைக்கு கிடைக்கும். iQOO Z9s ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மாடலுக்கு ரூ.24,999 விலையும், மற்றும் 8GB + 256GB மாடலுக்கு ரூ. 26,999 விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடலுக்கு ரூ.28,999 விலையும் பட்டியலிடப்பட்டுள்ளது. விற்பனைச் சலுகைகளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது (இன்று) ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனை ஆரம்பிக்க உள்ளது. iQOO Z9s: விவரக்குறிப்புகள் iQOO Z9s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், HDR10+ சான்றிதழுடன் 6.77-இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இந்த புதிய iQOO ஃபோனில் தூசி மற்றும் நீர்-எதிர்ப்புக்காக IP64 மதிப்பீடு கொண்டுள்ளது. iQOO Z9s ஆனது டூயல் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது, இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX882 OIS பிரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக 4K வீடியோ OIS, AI போட்டோ என்ஹன்ஸ் மற்றும் AI எரேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் யூனிட்டுடன் வருகிறது. iQOO Z9s ப்ரோ: விவரக்குறிப்புகள் iQOO Z9s ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 4,500நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.77-இன்ச் 3D கர்வ்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! iQOO Z9s ப்ரோ ஆனது டூயல் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது, இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX882 OIS பிரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக மேலே குறிப்பிட்டுள்ளதை போல, இந்த ஸ்மார்ட்போனிலும் அதே AI போட்டோ என்ஹன்ஸ் மற்றும் AI எரேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இதில் தூசி மற்றும் நீர்-எதிர்ப்புக்காக IP64 மதிப்பீடு கொண்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.