TECHNOLOGY

InBook Y3 Max லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இன்ஃபினிக்ஸ்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் InBook Y3 Max என்ற லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Infinix INBOOK Y3 Maxஆனது சிறந்த டிஸ்ப்ளே மற்றும் பிரீமியம் டிஸைனுடன் கூடிய சிற்ந்த செயல்திறனை வழங்கும் அட்வான்ஸ்ட் லேப்டாப் ஆகும். இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பட்ஜெட் லேப்டாப் 16 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இன்டெல்கோர் ஐ7 ப்ராசஸர் வரை கிடைக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Infinix INBOOK Y3 Max-ன் விலை, ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்களை பார்க்கலாம். இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் InBook Y3 Max லேப்டாப்பின் விலை: Infinix InBook Y3 Max லேப்டாப் கடந்த ஆகஸ்ட் 21 முதல் Flipkart-ல் விற்பனைக்கு வந்துள்ளது, இந்த லேப்டாப் ரூ.29,999 என்ற விலையில் தொடங்குகிறது. Intel Core i3 CPU ப்ராசஸருடன் வரும் பேஸ் வேரியன்ட் InBook Y3 Max லேப்டாப்பின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. intel core i5 மற்றும் intel core i7 ப்ராசஸர் ஆப்ஷன்களுடனும் இந்த லேப்டாப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த லேப்டாப் ப்ளூ, கிரே மற்றும் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இன்ஃபினிக்ஸ் இன்புக் ஒய்3 மேக்ஸ் லேப்டாப்பின் ஸ்பெசிஃபிகேஷன்கள்… Windows 11-ல் இயங்கும் இந்த லேப்டாப்பானது 16-இன்ச் ஃபுல் -HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 87% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 300nits பீக் பிரைட்னஸ் மற்றும் 60% NTSC வைட் கலர் காமெட்டை (wide colour gamut) கொண்டுள்ளது. 15.6-இன்ச் லேப்டாப்களுடன் ஒப்பிடும்போது இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 11 முதல் 12 சதவீதம் வரை கூடுதல் வியூவிங் ஸ்பேஸை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த லேப்டாப் ஒரு ரக்கட் பிரஷ் மெட்டல் ஃபினிஷுடன் அலுமினியம் அலாய் பாடியைக் கொண்டுள்ளது. இதையும் படிக்க: 4 நிமிடம் 30 வினாடியில் புல் சார்ஜ்.. அதிவேக பாஸ்ட் சார்ஜரை அறிமுக செய்த ரியல்மி! புதிய InBook Y3 Max லேப்டாப்பானது Intel Core i3, Intel Core i5 மற்றும் Intel Core i7 உள்ளிட்ட ஆப்ஷன்களுடன் இன்டகிரேடட் இன்டல் கிராஃபிக்ஸுடன் 12-வது தலைமுறை இன்டல் கோர் ப்ராசஸர்களில் இயங்குகிறது. இந்த லேப்டாப்களில் கொடுக்கப்பட்டிருக்கும் CPU-ஆனது 16GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 1TB வரையிலான PCIe 3.0 SSD ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர இந்த லேப்டாப்பில் 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்வதற்கான பிரத்யேக சீரியல் ATA (SATA) ஸ்லாட் உள்ளது. புதிய InBook Y3 Max லேப்டாப்பில் பேக்லிட் கீபோர்டு மற்றும் 7.06-இன்ச் டிராக்பேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பானது இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு HDMI 1.4 போர்ட், இரண்டு USB Type-C போர்ட்கள், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு microSD கார்டு ஸ்லாட்டை கொண்டுள்ளது. அதிவேக வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்காக Wi-Fi 6-ஐ இந்த லேப்டாப் சப்போர்ட் செய்கிறது. இதையும் படிக்க: Iphone 15 : வங்கி சலுகைகள் உடன் Flipkart-ல் ஐபோனுக்கு சூப்பர் ஆஃபர் மேலும் இதில் டூயல் மைக்ரோஃபோன்களுடன் கூடிய ஃபுல் -எச்டி (1080p) வெப்கேம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.78 கிலோ கிராம் எடை கொண்ட இந்த லேப்டாப் USB Type-C போர்ட் வழியே 65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 70Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 14.6 மணி நேரம் வரை ஸ்டாண்ட்-பை டைம் மற்றும் 8.5 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் டைமிங்கையும் இந்த பேட்டரி வழங்கும் என்று கூறப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.