TECHNOLOGY

OnePlus Open Foldable-க்கு பெரும் ஆஃபர் வழங்கும் நிறுவனம்... விவரங்கள் உள்ளே!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபோல்டபிள் அதாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோனை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனிடையே சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட் ஃபோனை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்ட வர உள்ளது. இதனால் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஃபோல்டபிள் தயாரிப்பில் ஒரு அற்புதமான டீலை வழங்குகிறது. பெரிய நிபந்தனைகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இல்லாமல் ரூ.20,000 வரை பெரும் தள்ளுபடியுடன் OnePlus Open Foldable மொபைலை வாங்கலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.!! ஆனால் இது உண்மை தான், இந்த மொபைல் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அதன் ஹார்ட்வேர்-ஐ இனி லேட்டஸ்ட் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஓபன் ஃபோல்டபிள் மொபைலுக்கான சலுகைக்கான விவரங்கள் இங்கே… ஒன்பிளஸ் ஓபன் மொபைலுக்கான டிஸ்கவுண்ட் ஆஃபர்: உங்களிடம் குறிப்பிட்ட பேங்க்கின் கார்டு இருந்தால் ரூ.20,000 தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் ஓப்பன் மொபைலை நீங்கள் வாங்கலாம். ஒன்பிளஸ் ஓபன் மொபைலின் அசல் விலை ரூ.1,39,999-ஆக உள்ள நிலையில் தற்போதைய புதிய டீல் மூலம் இதனை ரூ.1,19,999-க்கு வாங்க முடியும். ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது அதன் நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வாங்கினால் இந்த டீல் பொருந்தும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை OnePlus-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பெறலாம். இது லிமிட்டட் பீரியட் ஆஃபராக இருக்கலாம் அல்லது விரைவில் எதிர்பார்க்கப்படும் OnePlus Open 2 வெளியீட்டின் அடையாளமாக இருக்கலாம். OnePlus Open மொபைல் பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் இது 2023 ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. விரைவில் 8 Gen 4 அறிமுகமாக உள்ள நிலையில் 2-ஜென்ரேஷன் பழையதாக ப்ராசஸராக இது மாறும். இந்த ஃபோல்டபிள் டிவைஸ் 7.82-இன்ச் (2,268×2,440 பிக்சல்கள்) 2K ஃப்ளெக்ஸி-ஃப்ளூயிட் LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்ப்ளே மற்றும் 6.31-இன்ச் 2K LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED கவர் ஸ்கிரீனை கொண்டுள்ளது. 16GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14-ல் இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold 6 மற்றும் கூகுள் நிறுவனத்தின் Pixel 9 Pro Fold டிவைஸ்களின் விலை ரூ.1,60,000-க்கு மேல் செல்லும் நிலையில், நீங்கள் ஒரு பிரீமியம் ஃபோல்டபிள் மொபைலை வாங்க விரும்பினால் ஒன்பிளஸ் ஓபன் டிவைஸிற்கு தற்போது வழங்கப்படும் ஆஃபரை கருத்தில் கொள்ளலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.