TECHNOLOGY

நாய்ஸ் என்1 ப்ரோ: Active Noise Cancellation, 60 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுள்!

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஏர்பட்சான நாய்ஸ் என்1 ப்ரோ கடந்த புதனன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கேன்சலேசன் தொழில்நுட்பத்துடன் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ பட்சாக இது உருவாகியுள்ளது. பாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத் 5.3, ஹைபர்சிங்க் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருப்பது இதன் அட்டகாசமான சிறப்பம்சங்கள். இதன் சிறப்பம்சங்கள் பற்றி மேலும் இங்கே பார்க்கலாம். இதில் உடனடி பாஸ்ட் சார்ஜிங் மூலமாக 10 நிமிடம் இந்த இயர்பட்ஸை சார்ஸ் போட்டால் போதும், 200 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். மேலும் இந்த பட்ஸில் 11 மிமீ டிரைவர்ஸ் மற்றும் ப்ளூடூத் 5.3, ஹைபர்சிங்க் தொழில்நுட்பங்கள் இருப்பதால் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இகுறித்த விரிவான தகவலை இங்கே பார்க்கலாம். நாய்ஸ் என்1 ப்ரோவின் இந்திய விலை எவ்வளவு? நாய்ஸ் என்1 ப்ரோ இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுக விலையாக ரூ.1499-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த இயர்பட்ஸ் குரோம் பிளாக், குரோம் பெய்ஜ், குரோம் கிரீன், குரோம் பர்பிள் உள்ளிட்ட 4 நிறங்களில் கிடைக்கும். இந்த மாத கடைசி முதல் இந்த இயர்பட்ஸை பிரத்யேகமாக அமேசான் இணையதளம் மூலம் வாங்க முடியும். மேலும் நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைதளமான gonoise.com மூலமும் வாங்கலாம். நாய்ஸ் என்1 ப்ரோ சிறப்பம்சங்கள்: நாய்ஸ் என்1 ப்ரோ ஏர்பட்ஸில் 11 மி.மீ டிரைவர்ஸ், குவாட்(4) மைக் செட்அப்புடன் நாய்ஸ் கேன்சலேசன் இருப்பதால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் மிகவும் தெளிவான பேச்சை தொடர முடியும். குரோம் மற்றும் மெட்டாலிக் பினிசுடன் கிடைக்கும் இந்த பட்ஸின் ட்ரூ ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தில் 32 டிபி ஏன்சி இருப்பது ஓர் சிறப்பம்சம், இதன் மூலம் சுற்றுப்புற சத்தத்தை அளவே குறைக்கவும், டச் கண்ட்ரோலை எளிதாக பயன்படுத்தவும் வழி செய்கிறது. இதில் 40 எம்.எஸ் லோ லேட்டன்சி இருப்பதால் கேம் விளையாடும் போதோ, ஆடியோ அல்லது வீடியோ பார்க்கும் போதோ எந்தவித இடையூறோ, தாமதமோயின்றி தெளிவான இணைப்பை தர வழிவகை செய்கிறது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! மேலும் இதில் இருக்கும் டூயல் பேரிங் மற்றும் ஹைபர்சிங்க் தொழில்நுட்பம் விரைவான உடனடி இணைப்பை தருகிறது. இதில் ப்ளூடூத் 5.3 இருப்பதால் பட்ஸை ஸ்ட்டோரோஜ் கேஸில் இருந்து வெளியே எடுக்கும்போதே ஏற்கனவே ஃபேர் பண்ண டிவைசுடன் அதிவிரைவான இணைப்பை உண்டாக்கிவிடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்சில் ஐபிஎக்ஸ்5 ரேட்டிங்குடன் வந்துள்ள இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 மணிநேரமும, 10 நிமிடம் சார்ஸ் போட்டாலே 2 மணிநேரம் வரையும் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பானது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.