LIFESTYLE

Independence Day 2024 : சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு... செங்கோட்டையின் சிறப்புகள் தெரியுமா?

சுதந்திர தினம் 2024 ஆகஸ்ட் 15 … இந்தியாவின் சுதந்திர தினம்.. நாடு முழுவதும் இந்த தினத்திற்காக கோலாகலமாக தயாராகி வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மாறும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அனுமதி இல்லாமல் செல்வது,ட்ரான் , பட்டம் போன்றவற்றை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த செங்கோட்டையில் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டாமா? லால் கிலா என்று அழைக்கப்படும் செங்கோட்டை இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். இது 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. தாஜ்மஹால் கட்டிய அதே ஷாஜஹான் தான். இந்த செங்கோட்டை இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. வரலாறு : செங்கோட்டை முகலாய பேரரசர் ஷாஜஹானால் 1638 ஆம் ஆண்டு ஷாஜஹானாபாத்தின் தலைநகராகக் கட்டப்பட்டது. இது முகலாய கட்டிடக் கலைஞர் உஸ்தாத் அஹ்மத் லஹூரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த கோட்டையின் கட்டுமானம் 1648 இல் நிறைவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் கோட்டை முகலாயப் பேரரசர்களின் வசிப்பிடமாக இருந்தது. 1837 இல் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் முடிசூட்டு விழா மற்றும் 1857 இல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் உட்பட இந்திய வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளின் தளமாக இது உள்ளது. கோட்டை அமைப்பு : செங்கோட்டையின் கட்டுமானம் 1638 இல் தொடங்கி 1648 இல் நிறைவடைந்தது. கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்கு பல நுழைவாயில்கள் உள்ளன. கோட்டையின் முக்கிய நுழைவாயில் லாகூர் கேட் வழியாக உள்ளது. கோட்டையில் பேரரசர் தனது குடிமக்களுடன் உரையாடும் ஒரு பெரிய திறந்த முற்றம் உள்ளது அது திவான்-இ-ஆம், அல்லது பொது பார்வையாளர்களின் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. செங்கோட்டையில் உள்ள மற்ற முக்கியமான கட்டமைப்புகளில் ரங் மஹால் சிறப்புப் பங்கு வகிக்கிறது. இந்த அரண்மனையில் பேரரசர்களின் மனைவிகள் தங்கியிருந்தனர். கோட்டை அழகிய சுவரோவியங்கள் மற்றும் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் பல தோட்டங்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளன. கோட்டையின் மிக முக்கியமான கட்டமைப்புகளில் ஒன்று மோதி மசூதி அல்லது முத்து மஸ்ஜித் ஆகும். இந்த மசூதி ஷாஜகானின் மகன் ஔரங்கசீப்பால் கட்டப்பட்டது. இது முகலாய கட்டிடக்கலைக்கு மிக அற்புதமான உதாரணம். இந்த மசூதி வெள்ளை பளிங்குக்கல்லால் ஆனது. இங்கு தினமும் மாலையில் நடைபெறும் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி கோட்டை அழகை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி இங்கு வரும் பார்வையாளர்களை கவர்கிறது. இது தவிர இந்த கோட்டை பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்திய சுதந்திரம் பெற்ற உடன் நேரு கொடி ஏற்றிய நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இடமாக இருந்து வருகிறது. சரி இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தை எப்படி அடைவது என்று யோசிக்கிறீர்களா? விமானம் மூலம் வந்தால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அடைந்து அங்கிருந்து கோட்டைக்கு பேருந்துகள், மெட்ரோ மற்றும் ஆட்டோக்கள்மூலம் வரலாம். நீங்கள் ரயிலில் வந்தால் தமிழகத்தில் இருந்து துரந்தோ எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் மூலம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து வண்டி பெறலாம். திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாளும் செங்கோட்டை திறந்திருக்கும். பார்வையாளர்கள் செங்கோட்டையை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பார்வையிடலாம். தில்லி அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியை சுற்றிப்பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். Also read : Independence day 2023 : ஒரு துரோகத்தால் திறந்த கோட்டைக் கதவும் வீழ்ந்த வீர மங்கையின் கதையும் செங்கோட்டை சுற்றி பார்க்க டிக்கெட் விலை இந்தியர்களுக்கு ரூ.35, வெளிநாட்டவர்களுக்கு ரூ.500. செங்கோட்டையில் ஒளி-ஒலி ஷோவுக்கான நுழைவுச்சீட்டு பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.20. வார இறுதியில் டிக்கெட் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.80 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.30 ஆகா வசூலிக்கப்படும். ஆனால் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்க படாது. பாதுகாப்பு கருதி சிறப்பு அழைப்பு அல்லது அனுமதி பெற்று தான் கலந்துகொள்ள முடியும். சுதந்திர அணிவகுப்புகள், கோடி ஏற்றம், சிறப்பு உரை எல்லாம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.