LIFESTYLE

தாறுமாறான சுவையில் தட்டு வடை செட்... இந்த சேலத்து நொறுக்குத் தீனியின் சுவை ரகசியம் தெரியுமா...

சேலம் தட்டு வடை செட் சேலம் என்றாலே சட்டுன்னு எல்லோருக்கும் மாம்பழம் நினைவுக்கும் வரும். புகழ்பெற்ற சேலத்து மாம்பழம் சீசனில் தான் கிடைக்கும் அதைத் தாண்டி எல்லாக் காலத்திலும் மக்களால் விரும்பி ருசிக்கப்படுவது சேலத்து தட்டு வடை செட். இந்த சேலத்து புகழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேலத்தின் சுவையைப் பரப்பி வருகிறது. 40 வருடங்களுக்கு மேலாக இந்த தட்டு வடை செட்டு சேலத்திலிருந்து வருவதாக வாய்வழி வரலாறு கூறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய தின்பண்டமாகத் தட்டு வடை செட் இருக்கிறது. சேலம் மாநகரம் முழுவதும் மாலைப் பொழுதில் தெருக்களில் தட்டு வடை செட் கடையை நாம் காண முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்குச் சென்று திரும்பும் பெரியோர்களும் மாலை நேரத்தில் இங்கு கூடுவதுண்டு. இங்கு தட்டு வடை செட்டில் எண்ணற்ற வகையில் தயாரிக்கப்படுகிறது. நொறுக்கல் செட்டு, பூண்டு செட்டு, தக்காளி செட்டு, மாங்கா செட்டு, வெள்ளரிக்காய் செட்டு, முறுக்கு செட்டு, பன் ரோஸ்ட், வெங்காயம் செட்டு, மசாலா சுண்டல் போன்ற சுவை மிக்க செட்டு வகைகள் சேலத்தில் கிடைக்கிறது. இதில் கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், புதினா சட்னி மற்றும் தக்காளி சட்னி போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. உடலுக்கு நன்மை தரும் காய்கறி வகைகள் ருசியான வடிவில் தட்டு வடை செட்டில் இருப்பதால் இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கின்றனர். சேலத்து தட்டு வடை செட்டு குறித்து உணவுப் பிரியர்கள் கூறுகையில், “சேலம் என்றாலே மாம்பழம் தான் பிரபலம். அதற்கு அடுத்தபடியாக தட்டு வடை செட்டை சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக இருந்து வருகிறது. தட்டுவடை செட்டு இந்த அளவிற்கு பிரபலம் அடைந்ததற்கு காரணம் இதன் சுவை. இதில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை, உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. இதனை உட்கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும் என்பதால் நாங்கள் அனைவரும் தினமுமே இங்கு வந்து நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டுச் செல்வது வழக்கம். இதையும் படிங்க: கண் தானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை… திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… இங்கு வகை வகையான தட்டுவடை செட்டுகள் கிடைக்கிறது. நொறுக்கல் செட்டு, பூண்டு செட்டு, தக்காளி செட்டு, மாங்காய் செட்டு, வெள்ளரிக்காய் செட்டு, முறுக்கு செட்டு, பன் ரோஸ்ட் போன்ற பல வகைகளில் செட்டு கிடைக்கிறது. இந்த காலத்தில் எத்தனையோ ஜங்க் ஃபுட்ஸ் கடைகளில் விற்கப்படுகிறது, இவற்றையெல்லாம் உட்கொள்ளும் போது கொழுப்புச் சத்துக்கள் அதிகளவில் கூடி உடல் பருமன் ஏற்பட்டு உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது. ஆனால் தட்டு வடை செட்டில் கேரட் மற்றும் பீட்ரூட் தான் உள்ளது. இதனை சாப்பிடுவதால் வைட்டமின் ஏ மற்றும் சி கிடைக்கிறது. நற்குணங்கள் மிகுந்த இந்த தட்டு வடை செட்டை நாம் அனைவரும் உட்கொள்ள வேண்டும். எனவே வெளி மாநிலம், பிற மாவட்டங்களிலிருந்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு முறையாவது சேலம் தட்டு வடை செட்டின் ருசியை அனுபவித்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.