LIFESTYLE

இந்த மாதிரி டீ எங்கும் கிடைக்காதா... ஏற்காடு செல்லும் டூரிஸ்டுகளை சொக்க வைக்கும் டீ...

புதுமையான கோவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது தீரா காதல் இருக்கும். அப்படிப்பட்டவற்றில் ஒன்று தான் தேநீர் மீதான பிரியம். இந்த தேநீர் பிரியர்கள் உணவு சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் தேநீர் அருந்தாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். அவர்கள் செய்யும் வேலையில் ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டால் தேநீரை அருந்தி மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்வார்கள். அந்த அளவுக்குத் தேநீர் பிரியர்கள் தேநீரின் மீது அதீதப் பிரியம் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட தேநீர் பிரியர்கள் இஞ்சி டீ, லெமன் டீ, கட்டன் சாயா என பல பரிமாணங்களில் அந்த தேநீரின் சுவையை ருசித்திருப்பார்கள். ஆனால் எப்பேர்ப்பட்ட தேநீர் வெறியராக இருந்தால் கூட இந்த மாதிரி ஒரு டீயை ருசித்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட டீ இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு போகும் வழியில் மட்டும் தான் கிடைக்கும் என கூறி அதற்கு மேலும் ஹைப் ஏற்றுகிறார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு மலையில் சேர்வராயன் கோவில் பகுதியில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் செல்வி டீக்கடையில் தான் இந்த விஷேச டீ விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வழக்கமான தேநீர் மட்டும் இல்லாமல் தேநீர் சுவையைக் கூட்டும் விதமாக வித்தியாசமான முறையில் ஆரஞ்சு பழத்தின் சாறு கலந்து டீ தயாரிக்கப்படுகிறது. இதையும் படிங்க: தீராத சொத்துப் பிரச்சினை கூட தீர்ந்திடும்… முனியப்பனிடம் காசு முடிந்து வேண்டும் பக்தர்கள்… இங்கு இஞ்சி டீ, லெமன் டீ போன்ற பலவகையான தேநீர் கிடைத்தாலும் இங்கு விஷேசமாகக் கிடைக்கும் இந்த ஆரஞ்சு டீ ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. ஏற்காடு மலையில் சேர்வராயன் கோவில் தான் மிகவும் உயரமான பகுதி, இங்கிருந்து ஏற்காட்டை பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். இதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் வேளையில் இந்த டீ கடையில் விற்கப்படும் ஆரஞ்சு டீ-யை தவறாமல் ஒருகை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “நாங்கள் வார விடுமுறையைக் கொண்டாட ஏற்காடு வந்தோம். இங்கு வந்தபோது ஆரஞ்சு பழ சாற்றில் டீ போடுவதைக் கண்டோம். இதனைப் பலரும் வாங்கி அருந்திக் கொண்டிருந்தார்கள். பிறகு நாங்களும் இதன் சுவையை அருந்திப் பார்க்கலாமே என்று பார்த்தபோது, இதன் சுவை புதுவிதமான உணர்வைத் தந்தது. பெரும்பாலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் போட்டு அருந்தியுள்ளோம். ஆனால் முதல் முறையாக ஆரஞ்சு பழத்தில் டீ போட்டு சுவைத்து இருக்கிறோம். இந்த ஆரஞ்சு டீ பருகியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.