LIFESTYLE

Raksha Bandhan 2024 : அரிசி, பூசணி விதைகள்... வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே சுற்றுச்சூழலுக்கு உகந்த ராக்கி செய்யலாம்.! வீடியோக்கள் இதோ..

ராக்கி ரக்ஷா பந்தன், உடன்பிறப்புகளுக்கு இடையிலான உறவைக் குறிக்கும் முக்கிய பண்டிகை ஆகும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது. இது அன்பின் அழகான வெளிப்பாடு என்றாலும், அது பெரும்பாலான நேரங்களில் செலவை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களால் பளபளக்கும் பாரம்பரிய ராக்கிகள், மக்காத குப்பைக் குவியலுக்கு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த ராக்கியை வீட்டில் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். அரிசி ராக்கி: அரிசி ராக்கி சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சிறந்த வழியாகும். இது எளிதானது மற்றும் உங்கள் சமையலறையில் உள்ளது. இதற்கு சில அரிசி தானியங்கள், நூல், மணிகள் மற்றும் ஒரு அட்டை துண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அட்டைப் பெட்டியில் அரிசி தானியங்களைக் கொண்டு நூலைப் பயன்படுத்தி ராக்கி போன்ற வடிவங்களை தயார் செய்து அழகான, சுற்றுச்சூழலுக்கு உகந்த ராக்கியை உருவாக்கி கொள்ளுங்கள். பாஸ்தா ராக்கி: பாஸ்தா ராக்கி சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றொரு சிறந்த வழியாகும். இதனை உருவாக்க ஒரு சிறிய வட்ட வடிவிலான தடிமனான பேப்பர் அல்லது அட்டையில் கம்-ஐ தடவி அதன் மீது பாஸ்தாவால் வடிவங்களை உருவாக்கவும். பாஸ்தாவை பார்வைக்குக் கவரும் வகையில் பெயிண்ட் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிக்கவும். அதனை வண்ணமயமான நூலின் மையப் பகுதியில் இணைக்கவும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ராக்கியை தயார் செய்யலாம். உலர் பழ ராக்கி: ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள உடன்பிறப்புகளுக்கு, உலர் பழ ராக்கி சரியான தேர்வாகும். இதனை தயார் செய்ய பாதாம், முந்திரி அல்லது திராட்சை போன்ற சில உலர் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு சிறிய வட்ட வடிவிலான தடிமனான பேப்பர் அல்லது அட்டையில் கம்-ஐ தடவி அதன் மீது சமமாக பாதியாக பிரித்த பாதாம் மூலம் வடிவங்களை உருவாக்கவும். அதனை வண்ணமயமான நூலின் மையப் பகுதியில் இணைக்கவும். பிறகு நூலின் மீது கம்-ஐ தடவி அதன் மீது உலர் திராட்சையை வைக்கவும், அதன் நடுவில் சிறிய மணிகளை வைத்து மேலும் அழகு சேர்க்கலாம். பூசணி விதைகள் ராக்கி: பூசணி விதைகள் ராக்கிக்கு ஒரு சிறந்த அழகை உருவாக்குகிறது. இதனை தயார் செய்ய பூசணி விதைகள், கலர் மணிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி விதைகளில் வண்ணம் தீட்டிகே கொள்ளலாம். பின்பு ஒரு சிறிய வட்ட வடிவிலான தடிமனான பேப்பர் அல்லது அட்டையில் கம்-ஐ தடவி அதன் மீது பூசணி விதைகள் ஓட்டலாம். பிறகு பூசணி விதைகள் மீது வண்ணமயமான மணிகளை கொண்டு அலங்கரிக்கவும். அதனை நூலின் மையப் பகுதியில் இணைக்கவும். பிறகு நூலின் மீது கம்-ஐ தடவி அதன் மீதும் கலர் மணிகளால் அலங்கரிக்கலாம். இந்த ராக்கி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். முந்திரி மற்றும் மசாலா ராக்கி: முந்திரி மற்றும் மசாலா ராக்கியை தயார் செய்ய முந்திரி, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வட்ட வடிவிலான தடிமனான பேப்பர் அல்லது அட்டையில் கம்-ஐ தடவி அதன் மீது முந்திரி, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை உங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் ஓட்டவும். அதனை நூலின் மையப் பகுதியில் இணைக்கவும். இந்த ராக்கி, பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, நல்ல நறுமணத்தையும் பரப்பும். பொம் பொம் ராக்கி: பொம் பொம் ராக்கிகளை உருவாக்கி அணிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கம்பளி மற்றும் நூலால் வண்ணமயமான உருண்டையை உருவாக்கவும். அதனை ஊசி நூலால் கோர்த்து வட்டமாக இணைக்கவும். பிறகு அதனை ஒரு சிறிய வட்ட வடிவிலான தடிமனான பேப்பர் அல்லது அட்டையில் கம்-ஐ தடவி அதன் மீது ஒட்டவும். அந்த உருண்டையின் வட்ட வடிவு மீது ஒரு மஞ்சள் நிற வட்ட பேப்பரை ஒட்டி, கண், வாய் கொண்டு வரையவும். பிறகு அதனை ஒரு நூலில் இணைக்கவும். க்ளே ராக்கி: வீட்டிலேயே க்ளே ராக்கியை உருவாக்கவும், பின்னர் விரும்பிய வடிவத்தில் க்ளேவை வடிவமைக்கவும். க்ளே காய்ந்ததும் பெயிண்ட் அடித்து கலர் மணிகளை வைக்கவும். பிறகு அதை ஒரு நூல் மூலம் இணைக்கவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.