LIFESTYLE

பார்வையற்றோர் வழங்கும் பாத சிகிச்சை... பயன்கள் தெரிந்தால் அசந்து போவீங்க...

பாத சிகிச்சை நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கால் பாதத்தின் மூலம் அதன் செயலைத் தூண்ட முடியுமா… கண்டிப்பாக முடியும் கால் பாதத்தின் நரம்புகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராகக் கொண்டு செல்ல முடியும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் கால் பாதத்தில் உள்ளதால் இதில் அழுத்தம் கொடுக்கும் போது நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம் காணப்படுகிறது மேலும் உடம்பில் இருக்கும் சிறு சிறு வலிகள் எல்லாம் கால் பாதத்தின் அழுத்தம் மூலம் குறைகிறது. அப்படி இந்த கால் பாத சிகிச்சையை இந்த தூத்துக்குடி மாவட்டம் சின்னக்கண்ணபுரத்தில் பார்வையற்றவர்கள் செய்து வருகின்றன. இவர்கள் தேசிய பார்வை ஊனமுற்றோர் நிறுவனத்தில் பாத தெராபிஸ்டாக நான்கு மாதம் கோஸ் முடித்துவிட்டு அந்த நிறுவனம் மூலம் இந்த தூத்துக்குடியில் பணிபுரிகின்றனர். இந்தப் பாத சிகிச்சை பற்றி அவர்கள் கூறுகையில், “முதலில் கால்களை ஸ்ட்ரெச் செய்வோம், அப்படி செய்வதன் மூலம் எலும்புகள் லேசாகி மூட்டு வலிகள் கால் வலிகளைச் சரிப்படுத்தும். அதன் பிறகு அதன் நரம்புகள் லேசாக மாறுவதற்குக் காலை ரொட்டேட் செய்து அதன் பிறகு பிரஷர் பாய்ண்ட் ஆக்டிவேட் செய்கிறோம். இதையும் படிங்க: ஏற்காடு போகும் சுற்றுலாப் பயணிகளே அலர்ட்… சேலத்தில் இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க… முதலில் சோலார் பிளக்ஸ் என்ற பிரஷர் பாய்ண்ட் ஆக்டிவேட் செய்கிறோம். அது எதற்கு என்றால் நம் மனதில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றுவதற்கு இதனைச் செய்கிறோம். அதற்குப் பிறகு பைசின் வாக் இது நரம்புக்கும் உடலுக்கும் ரத்த ஓட்டம் செல்வதற்காக கைகளை மூலம் அழுத்தம் கொடுக்கிறோம். இது அக்குபஞ்சர் வகையாகவும், ஒவ்வொரு விரல்களின் ஒவ்வொரு நரம்பையும் ஆக்டிவேட் செய்கிறோம். இது நம் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் போன்றவற்றை அகற்ற உதவுகிறது. மேலும் கழுத்து சுளுக்கு, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு விரல்களில் உள்ள நரம்புகளை அழுத்தம் தருவதன் மூலம் குணமாகிறது. மேலும் பாதத்தில் அழுத்தம் அகலும். மேலும் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் நன்றாகச் செயல்படும்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.