LIFESTYLE

கயாவில் பித்ருக்கள் வழிபாடு... தென் மாவட்ட பயணிகளுக்காக நெல்லை - பாட்னா சிறப்பு ரயில்...

நெல்லை - பாட்னா சிறப்பு எக்ஸ்பிரஸ் பீகார் மாநிலத்தில் உள்ள கயா தொன்மையான இந்து கோவில்களை உள்ளடக்கியதாகும். அங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அங்கு திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். மேலும் வரும் செப்டம்பர் மாதத்தில் கயாவில் ‘பித்ரபாக்சா’ என்னும் பித்ருக்களுக்கான பூஜை 16 தினங்கள் நடைபெறும். முன்னோர்களை வணங்கிடும் வகையில் நாடு முழுவதும் இருந்து பீகார் மாநிலத்தவர்கள் அங்கு செல்வது வழக்கம். இதையொட்டி நாட்டின் முக்கிய பகுதிகளிலிருந்து தற்போது பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருநெல்வேலி - பாட்னா சிறப்பு எக்ஸ்பிரஸ் (எண்.06112) இன்று (17ஆம் தேதி) இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, 3வது நாள் காலை 5.45 மணிக்கு பாட்னாவிற்குப் போய்ச் சேருகிறது. இந்த ரயிலில் ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். இதையும் படிங்க: வாழைத்தாரில் மறைந்திருந்த ஆச்சரியம்… மறுவாழ்வளித்த வாழை வியாபாரி… திருநெல்வேலியில் இன்று இரவு 9.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ராஜூலா, தேவுடா, கோட்டவலசா, ஸ்ரீகாகுளம்ரோடு, புவனேஸ்வர், கட்டாக், துர்காபூர், சித்தரஞ்சன், ஜோசித், ராஜேந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வழியாக பாட்னாவிற்கு வரும் 20ஆம் தேதி செவ்வாய் காலை 5.45 மணிக்கு போய் சேரும். இதேபோல் ஒருவழி மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்தும் ஒரு சிறப்பு ரயில் (06.111) நாளை 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, கொல்லம், காயங்குளம், திருவல்லா, கோட்டயம், திரிசூர், பாலக்காடு, விஜயவாடா, புவனேஸ்வர் மார்க்கத்தில் வரும் 21ஆம் தேதி புதன்கிழமை பாட்னா போய் சேரும். திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் இந்த ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.