LIFESTYLE

BP நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.. கொய்யா இலைகளில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!

கொய்யா இலை நன்மைகள் கொய்யாவின் நன்மைகளை நாம் நன்கு அறிவோம் ஆனால் அதன் இலைகளின் நன்மைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. கொய்யா இலைகளும் மிகவும் நன்மை அளிக்கும். இதன் இலைகள் ஈறு பிரச்சனைகள் மற்றும் பல் வலி போன்ற வாய்வழி பிரச்சனைகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், தோல் மற்றும் மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. பொதுவாக, ஒவ்வொருவரும் தனது உடல் நலனில் அக்கறை கொண்டு அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகின்றனர், அதில் ஒன்று கொய்யா பழம் ஆகும். ஆனால் அதன் இலைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா? கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குறிப்பாக கொய்யா இலையில் ப்ரோடீன், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், அயன், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. இது போன்ற ஏராளமான சத்துக்கள் கொய்யா இலைகளில் காணப்படுவதால், இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இந்த இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் பண்புகள் உள்ளதால், காயங்களை ஆற்ற உதவுகிறது. கொய்யா இலையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாய் புண்கள் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறு பிரச்சனைகளில் இருந்து விடுபட இதன் இலைகளை மென்று சாப்பிடலாம். கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. மேலும், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது. Also Read | மா இலைகளை இப்படி மென்று விழுங்கினால் இத்தனை நன்மைகளா..? இத்தனை நாள் தெரியாம போச்சே..! கொய்யா இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் பண்புகள் ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற ஈறு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறு பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா இலைகளை சாப்பிடுவதால், சிறந்த பலன் கிடைக்கும். கொய்யா இலைகள் வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. வைட்டமின் சி உடன், ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளும் இந்த இலைகளில் உள்ளன. எனவே, அவை சளி, இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றைக் குறைக்கும். கொய்யா இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். கொய்யா இலைகள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கொய்யா இலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகிறது. இதனுடன், செரிமான ஆரோக்கியம் மேம்படும். மேலும், கொய்யா இலைகள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.