SPIRITUAL

2025 ஆம் ஆண்டு இதுவெல்லாம் நடக்குமாம்.. ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

பூமி என்றாவது ஒரு நாள் அழியும் எனப் பலரும் கூறி வருகின்றனர். பிரபல ஜோதிடர்களின் கணிப்புகள் மற்றும் சில அறிவியல் கோட்பாடுகளைப் பார்த்தால், இது உண்மையாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது. சமீப காலங்களில் உலகில் நடந்த சில முக்கிய சம்பவங்களைப் பார்த்தால், உலகின் அழிவு தவிர்க்க முடியாதது என்ற கணிப்புகள் உண்மையாகலாம் என்ற நம்பிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. குறிப்பாக ஐந்து சம்பவங்கள் இந்த வாதத்தை வலுப்படுத்துகின்றன. அவை என்னவென்று தற்போது தெரிந்துகொள்ளலாம். ஜோதிட கணிப்பும் உலகப் போரும்: பல ஜோதிடர்களின் கணிப்புகள் மற்றொரு உலகப் போர் தவிர்க்க முடியாதது என்று கூறுகின்றன. 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் மற்றும் சனி ஒரே ராசியில் இணையும் என்றும், இந்த சேர்க்கை உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இது உலக நாடுகளில் அமைதியின்மைக்கும் போருக்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் கணித்து கூறியுள்ளனர். ஓம் மலையில் மறைந்த ஓம்: இமயமலையில் உள்ள ஓம் மலையை சிவனின் இருப்பிடமாக மக்கள் கருதுகின்றனர். இங்கு சிவன் ஏதோ ஒரு வடிவத்தில் வசிப்பதாக நம்புகிறார்கள். மலையில் படியும் பனி ஓம் வடிவில் தெரியும். ஆனால் இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக ஓம் மலையிலிருந்து பனி முற்றிலும் மறைந்துவிட்டது. அதன் மீது ஓம் அடையாளம் இல்லை. இது புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறினாலும், ஆன்மீக ரீதியாகவும் இது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று ஜோதிட நிபுணர்கள் கருதுகின்றனர். புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நிகழ்ந்த அசம்பாவிதம்: ஒவ்வொரு ஆண்டும் பூரியில் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கமான ஒன்று. விழாக்களின் ஒரு பகுதியாக ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. ஜெகந்நாதர் தனது உடன்பிறப்புகளுடன் பூரியில் உள்ள தனது வீட்டிலிருந்து குண்டிச்சாவில் உள்ள அத்தை கோவிலுக்குச் செல்வதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். இந்த ரத யாத்திரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ரதத்தைத் தொடுவது கூட மக்களை பாவங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பப்படுகிறது. ஆனால் 2024 ரத யாத்திரையில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலபத்ர பகவானின் சிலை ரதத்திலிருந்து கீழே விழுந்தது. இது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று மக்கள் கருதுகின்றனர். கேதார்நாத்தில் பக்தியில்லாத கூட்டம்: இந்துக்களின் சிறப்புத் தலமான கேதார்நாத்தை மக்கள் ட்ரெக்கிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளனர். பலர் இந்த இடத்தை சுற்றுலாத் தலமாகப் பார்க்கிறார்கள். இந்த ஆண்டு அதிக கூட்டம் அலைமோதியது. ஆனால் மக்கள் பக்தி உணர்வுடன் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக கோவிலுக்கு வருவது மற்றும் இங்கு இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது குறித்து உள்ளூர் பூசாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள் கோவிலுக்கு அருகில் எந்த கொண்டாட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாம் என்று ஒரு பூசாரி பார்வையாளர்களை எச்சரிக்கும் வீடியோ ஒன்றும் வைரலாக பரவியது. இதுபோன்ற நடவடிக்கைகள் தெய்வங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்றும், இது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் பண்டிதர்கள் எச்சரிக்கின்றனர். குமாரி தேவியின் அழுகை: நேபாளத்தில் சிறுமிகளுக்கு சிறு வயதிலேயே தேவி அந்தஸ்து கொடுத்து வழிபடுகிறார்கள். பருவ வயதை அடையும் வரை அவர்களை வழிபடுவார்கள். அதன் பிறகு தெய்வீக அந்தஸ்து மற்றொரு பெண்ணுக்கு மாற்றப்படும். இவர்களை குமாரி என்று அழைப்பார்கள். இவர்கள் தூய்மை, தெய்வீகம் மற்றும் புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் சமீபத்தில் இந்திர ஜாத்ராவில் குமாரி ஒருவர் தனது ரதத்திலிருந்து கீழே விழுந்ததால் அழுதாள். பலர் இதை துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதினர். தேவதை அழுவது பெரிய பேரழிவைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பொறுப்புத் துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை நியூஸ் 18 தமிழ்நாடு உறுதிப்படுத்தவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.