SPIRITUAL

வாஸ்து நாளில் இதை செய்யுங்கள்.. கண் திருஷ்டி, தோஷங்கள் நீங்கி வீட்டில் நிம்மதி நிலவும்..!

சொந்த வீடு என்பது பலருடைய பெருங்கனவு. அப்படி அந்த நீண்ட நாள் கனவு நிஜத்தில் வரும் போது அந்த வீட்டை எப்படி பார்த்து பார்த்து கட்டுவோம் என்னும் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தைகள் போதாது. அப்படி வாழ்நாள் முழுவதும் உழைத்த வருமானத்தை வீடு கட்ட செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். கட்டும் வீட்டை நிச்சயம் பலர் வாஸ்து பார்த்துதான் கட்டுவார்கள். சில நேரங்களில் வீடு கட்ட கட்ட சில ஆசைகள் முளைக்க ஆரம்பிக்கும். பின் அதற்கு ஏற்ப வாஸ்துவில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலமா. அப்படி ஆகும்போது அது வாஸ்து தோஷமாக மாறிவிடும். இந்த வாஸ்து தோஷங்கள் விலக வேண்டுமெனில் சில விஷயங்களை செய்ய வேண்டும். இதை செய்வதால் வீட்டில் பண வரத்தும் அதிகரிக்கும். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். வீட்டை கட்டும்போது வாஸ்துபடி நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டிற்குள் விழ வேண்டும். இப்படி கட்டப்படும் வீட்டில் அவற்றின் மூலம் வரும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் அப்படி காற்று உள்ளே வராதபடி கட்டிய வீட்டிற்குள் பண வரத்தும் குறையும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். பொதுவாக வீட்டிற்கு வாஸ்து குறிப்பதற்கு வாஸ்துநாள் பார்த்துதான் செல்ல வேண்டும். அதேபோல் திருஷ்டி பரிகாரங்கள் செய்வதற்கும் வாஸ்து நாள் சிறந்தது. உங்கள் வீட்டில் திருஷ்டி இருக்கிறது. நீங்கள் புது வீடு கட்டியதால் சுற்றி இருப்போருக்கு பொறாமை, கண் திருஷ்டி இருக்கிறது எனில் அதற்கான பரிகாரத்தை இந்த வாஸ்து நாளில் செய்யலாம். Also Read | Vastu Tips | குளியலறையில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க.. அப்புறம் பிரச்சினை தான்! அப்படி உங்கள் காலண்டரில் வாஸ்து நாள் பாருங்கள். அன்றைய நாளில் கைப்பிடி அளவிற்கு கல் உப்பு கொஞ்சம் வெண் கடுகு, மூன்று வர மிளகாய் ஆகியவற்றை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் வீட்டிற்கு வெளியே கிழக்கு பார்த்தபடி நின்று வலது புறம் மூன்று முறையும், இடது புறம் மூன்று முறையும் திருஷ்டி சுற்றுவதுப்போல் சுற்றுங்கள். திருஷ்டி சுற்றிய பின் அவற்றை அப்படியே நன்கு எரியும் நெருப்பில் போடவும். அதில் பொறியும் பொருட்களை போல் உங்கள் திருஷ்டி மற்றும் வாஸ்து தோஷம் கழியும். நெருப்பை முன் கூட்டியே தயார் செய்துக்கொள்ள சாம்பிராணி தூபக்காலில் தேங்காய் மட்டை, கொட்டாகுச்சிகளை மண்னெண்ணெய் ஊற்றி எரிய வைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் நீங்கள் சுற்றும் திருஷ்டி பொருட்களை போடலாம். இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு முறை வாஸ்து நாளில் அந்தி சாய்ந்த பிறகு செய்ய வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், செய்வினைகள், ஏவல்கள், திருஷ்டிகள் அகலும். வீட்டில் நிதி சார்ந்த பிரச்சனைகள், நோய் நொடிகள், மனக்கவலைகள் ஆகியவை தீரும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.