SPIRITUAL

Vastu Tips | குளியலறையில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க.. அப்புறம் பிரச்சினை தான்!

வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியாக வாஸ்து சாஸ்திரம் திகழ்கிறது. இது ஒவ்வொருவருடைய வாழ்விலும் முக்கிய இடம் வகிக்கிறது. வாஸ்து படி அனைத்துமே சரியாக இருந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். வாஸ்து சரியாக அமையவில்லை எனில், அதன் விளைவு மனதை மட்டுமல்ல, மனித உடலையும் பாதிக்கும். வீட்டில் அழகுக்காக வைக்கப்படும் சில பொருட்கள் கூட வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துகின்றன. வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றினால், வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் பல வழிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால், வாஸ்து விதிகளை பின்பற்றாமல் இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வீட்டின் அனைத்து அறைகளுக்கும் வாஸ்து விதிகள் கூறப்பட்டுள்ளதை போல குளியலறைக்கும் வாஸ்து கூறப்பட்டுள்ளது. அதை குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம். குளியலறையில் காலி வாளியை வைப்பது அசுபமாக பார்க்கப்படுகிறது. வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இனி குளியலறையில் குளித்த பிறகு எப்போதும் காலி வாளியை வைக்க வேண்டாம். அப்படி செய்வதால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். இதையும் படிக்க: 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் லட்சுமி-நாராயண யோகம்.. கோடிகளுக்கு அதிபதியாகும் 3 ராசிகள்! வாஸ்து விதிகளின்படி, குளியலறையில் கருப்பு வாளியை வைக்க கூடாது என கூறப்படுகிறது. கருப்பு வாளியை வைத்திருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கருப்பு வாளி வீட்டில் பிரச்சனைகளை கொண்டு வரும் என கூறப்படுகிறது. வாஸ்து படி, பாத்ரூமில் பச்சை வாளியை வைத்திருந்தால், சனி மற்றும் ராகுவின் தோஷங்களில் இருந்து பாதுகாக்கப்படலாம். குளியலறையில் பச்சை வாளியை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, குளியலறையில் பச்சை டைல்ஸ் பயன்படுத்தினால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். என்னதான் சுத்தம் செய்தாலும் பல வீடுகளில் பாத்ரூம் அழுக்கு படிந்து காணப்படும். பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக இருந்தால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும். இதற்கு பாத்ரூம் டைல்ஸை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் குளியலறையைக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.