SPIRITUAL

12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் லட்சுமி-நாராயண யோகம்.. கோடிகளுக்கு அதிபதியாகும் 3 ராசிகள்!

வேத சாஸ்திரங்களின் படி, சுக்கிரன் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைந்தால், லட்சுமி-நாராயண யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, லட்சுமி நாராயண யோகம் அனைத்து யோகங்களிலும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சுக்கிரனும் புதனும் எந்த ராசியில் ஒன்றாக சஞ்சரித்தாலும் இந்த யோகம் உருவாகும். லட்சுமி-நாராயண யோகத்தினால் பண வரவு அதிக அளவில் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருகும். புத்தாண்டின் தொடக்கத்திலேயே லட்சுமி-நாராயண யோகம் உருவாகவுள்ளது. வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதி மீன ராசியில் சுக்கிரன் நுழைகிறார். அதற்கு அடுத்த மாதத்தில் அதாவது பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மீனத்தில் புதன் சஞ்சரிக்கிறார். சுக்கிரனும் புதனும் மீன ராசியில் ஒன்றிணைவதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு லட்சுமி-நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகமானது 69 நாட்கள் நீடிக்கவுள்ளது. இதனால் புத்தாண்டில் முதல் இரண்டு மாதங்களுக்குள் மூன்று ராசியினர் வாழ்வில் பெரும் செல்வத்தை அடையவுள்ளனர். அவர்கள் யார் என தெரிந்துகொள்ளலாம். மீனம்: மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சரனகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கும்பம்: கும்ப ராசியின் 2-வது வீட்டிற்கு லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுப்பார்கள். புதிய வேலை தொடங்க உகந்த நேரம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். மிதுனம்: மிதுன ராசியின் 10-வது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலு நல்ல வெற்றி கிடைக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களை நியூஸ் 18 தமிழ்நாடு உறுதிப்படுத்தவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.