SPIRITUAL

Chanakya Niti | திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டுமா..? சாணக்கியர் சொல்வதை கேளுங்க!

பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர், தத்துவஞானியாகத் திகழ்ந்தவர் சாணக்கியர். அவருடைய அறிவுரைகள் எந்த காலத்திற்கும் உகந்ததாக அமைந்துள்ளது. அதனால் கிடைக்கும் பலன்களும் அளவிட இயலாதது. அவருடைய அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய பல கருத்துகளை சாணக்கிய நீதி கூறுகிறது. சாணக்கிய நீதி, அடிப்படையில் மனித வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களையும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை பற்றியும் சொல்லும். அந்த வகையில் ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சில விதிகளை கூறியுள்ளார். அவற்றை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளபடி, தனது வாழ்க்கைத் துணை சொன்னவுடன் செய்ய வேண்டிய முக்கியமான சில வேலைகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம். எதையும் இல்லை என்றும் வேண்டாம் என்றும் கூறக்கூடாது. சற்று யோசித்து நிதானமாக வேறு விதமாகத்தான் பதில் கூற வேண்டும். முடிந்தவரை அவர்கள் கேட்டதை செய்துவிடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணை சற்று சோகமாக இருந்தால், அல்லது வருத்தமாக இருந்தால் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். பின்னர் அவரது மனதை அமைதிப்படுத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ மகிழ்ச்சி தரும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். செய்யும் ஒரு செயல் அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை செய்ய வேண்டாம் என சாணக்கிய நீதி கூறுகிறது. ஒருவரின் கோபமே முதல் எதிரியாக உள்ளது. கோபம் உறவைக் கெடுக்கிறது. ஒருவரின் திருமண வாழ்க்கையில், துணையிடம் கோபத்தை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடித்தாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகம் ஆகிவிடும். குடும்பத்திலும், சமூகத்திலும் நம்மை அடையாளப்படுத்துவது நம்முடைய பேச்சுமுறையே. இனிமையான பேச்சு கொண்டவருக்கு குடும்ப உறவிலும், சமூகத்திலும் எப்போதும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சாணக்கியரால் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள இவற்றைக் கடைப்பிடித்தாலே நிச்சயமாக ஒருவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.